கால்நடை மருத்துவக் கல்லூரி அளிக்கும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அளிக்கும் சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி 09 -10 - 2012 அன்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியாக தமிழக அரசால் துவக்கி வைக்கப்பட்டது.
மாணவர்களுக்கு கால்நடை மருத்துவப் பட்டப்படிப்பை வழங்குவதுடன் இக்கல்லூரி தென் தமிழக மாவட்டங்களில் உள்ள மாடு ஆடு கோழி மற்றும் செல்லப்பிராணிகளுக்கு மருத்துவ வசதிகளையும் அளிக்கிறது.கால்நடை உற்பத்தி கால்நடை மருத்துவம் தீவன உற்பத்தி மற்றும் செல்லப்பிராணிகளின் நலன் ஆகிய பிரிவுகளின் பல்வேறு தொழில்நுட்ப பரிமாற்ற நிகழ்வுகளை இக்கல்லூரி தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.
மேலும் கிராமப்புற பகுதி இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்பினை அளித்து பொருளாதார மேம்பாட்டினை உறுதிப்படுத்தும் வகையில் கரவை மாட்டுப்பண்ணை, வெள்ளாடு வளர்ப்பு, செம்மறி ஆடு வளர்ப்பு, வெண்பன்றி வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு போன்ற பல்வேறு சுய வேலை வாய்ப்புகளை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அளித்து வருகிறது. கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சார்ந்த அனைத்து சுய வேலை வாய்ப்பு பயிற்சிகளில் பங்கு பெற தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பயிற்சி காலம் ஒரு மாதமாகும்.கறவை மாட்டுப்பண்ணை வெள்ளாடு வளர்ப்பு நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் வெண்பன்றி வளர்ப்பு போன்ற சுயவேலை வாய்ப்பு பயிற்சி கட்டணம் 3000 ஆகும். செம்மரி ஆடு வளர்ப்பு பயிற்சி கட்டணம் ஆயிரம் ரூபாய் ஆகும். பயிற்சிகளுக்கு ஆண்டு முழுவதும் சேர்க்கை நடைபெறுகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இப்பயிற்சியில் சேரலாம் .
பயிற்சியில் சேர விரும்புவோர் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் கால்நடை விரிவாக்க கல்வித்துறை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ராமையம்பட்டி சங்கரன்கோவில் ரோடு திருநெல்வேலி என்ற முகவரியில் அல்லது 04622336347 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே கிராமப்புற இளைஞர்கள் தொழில் முனைவோர்கள் கிராமப்புற பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் ஆகியோர் இப் பயிற்சியில் பங்கு பெற்று பயன்பெறுமாறு திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Nellai, Tirunelveli