முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் சட்டவிரோதமாக பயன்படுத்திய மோட்டார்கள் அதிரடி பறிமுதல்

நெல்லையில் சட்டவிரோதமாக பயன்படுத்திய மோட்டார்கள் அதிரடி பறிமுதல்

நெல்லையில் சட்டவிரோதமாக பயன்படுத்திய மோட்டார்கள் பறிமுதல்

நெல்லையில் சட்டவிரோதமாக பயன்படுத்திய மோட்டார்கள் பறிமுதல்

Illegally Used Motors in Nellai | நெல்லையில் சட்ட விரோதமாக பயன்படுத்திய மோட்டார்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டோர்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே எச்சரித்து இருந்தார்.

மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்ட சிறப்பு குழு ஆய்வு மேற்கொள்ளும்போது குடிநீர் குழாயில் இருந்து நேரடியாக குடிநீர் பெறப்படுவது கண்டறியப்பட்டாலோ, வீட்டுக்கு குடிநீர் இணைப்புகளில் சட்டவிரோதமாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டாலோ, மேற்படி கட்டிடத்திற்கான குடிநீர் இணைப்பானது நிரந்தரமாக துண்டிப்பு செய்யப்படுவதோடு குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் என மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையாளர் உத்தரவுபடி உதவி ஆணையாளர் காளிமுத்து அறிவுறுத்தலின்படி சட்டத்திற்கு புறம்பாக குடியிருப்புகளின் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்திட அமைக்கப்பட்ட சிறப்பு குழுவை சார்ந்த உதவி பொறியாளர் ராமசாமி இளநிலை பொறியாளர் முருகன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிங்க : நாமக்கல் முட்டை விலை அதிரடியாக உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி!

வார்டு 50ல் குடியிருப்பு பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சிய 16 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் வீட்டு உரிமையாளர்கள் இருந்து மோட்டார்கள் பறிமுதல் செய்வதுடன் அபதாரம் விதிக்கப்படுவதுடன் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவானது திருநெல்வேலி மாநகர் முழுவதும் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்வார்கள்” என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Local News, Tirunelveli