முகப்பு /திருநெல்வேலி /

90% மானியம்: ராதாபுரத்தில் கடல் கூண்டு மீன் வளர்ப்பு திட்டம் தொடக்கம்

90% மானியம்: ராதாபுரத்தில் கடல் கூண்டு மீன் வளர்ப்பு திட்டம் தொடக்கம்

X
கடல்

கடல் கூண்டு திட்டம் தொடக்கம்

Tirunelveli News | ராதாபுரம் தாலுகாவில் கூத்தங்குழி கிராமத்தில் கடல் கூண்டு மீன் வளர்ப்பு திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

ராதாபுரம் தாலுகா கூத்தங்குழி கிராமத்தில் விளாத்திகுளம் விடியல் டிரஸ்ட் சார்பில் மீனவ சமூகத்தின் வாழ்வாரத்தை மேம்படுத்த கடல் கூண்டு மீன் வளர்ப்பு திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் கூத்தங்குழி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் நபார்டு வங்கி பொது மேலாளர் பிடி உஷா மீனவ குழுவினருக்கு இரண்டு கடல் கூண்டுகளுடன் மீன் குஞ்சுகளையும் வழங்கி விழாவை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ‘கடல் கூண்டு மீன் வளர்ப்பு திட்டத்தினால் கடல் மீன் உணவுகளின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் நாட்டின் அன்னிய செலவாணியை பெருக்கவும் வழிவகை செய்யலாம்.

இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த இந்தியாவின் கடலோர மாநிலங்களிலேயே தமிழ்நாட்டின் தென்கடலோரப் பகுதிகள் மிகவும் சாதகமாக உள்ளது. இத்திட்டத்தினை பரவலாக்கும் நோக்கத்துடன் தொடங்கி இருப்பதால் 90 சதவீதம் நபார்டு வங்கியின் மானியத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே மீன்பிடி தொழில் செய்யும் நபர்கள் குழுவாக செயல்பட்டு இத்திட்டத்தில் இணைந்து பயனடையலாம் என்றார்.

கடல் கூண்டு

அதனை விடியல் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ஜோதிமணி வரவேற்று பேசினார். நபார்டு வங்கியின் நெல்லை, தென்காசி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சசிகுமார் திட்டம் விளக்கிப் பேசினார்.

நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், மீன் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர், உதவி இயக்குனர் ராஜதுரை, மத்திய மீன்வளத்துறை விஞ்ஞானி வினோத்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் கூத்தங்குடி பஞ்சாயத்து தலைவர் வளர்மதி, கவுன்சிலர் ராஜா, புனித சித்தேரி அம்பாள், மீனவர் குழு தலைவர் ராதிகாஸ், அன்னை வேளாங்கண்ணி மாதா, மீனவர் குழு தலைவர் ஆண்டர் சேவியர் வினிஸ்டர் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விடியல் டிரஸ்ட் அலுவலர்கள் அசோக்குமார், புஷ்பராணி, சத்திய தேவி ஆகியோர் செய்திருந்தனர். விடியல் டிரஸ்ட் திட்ட மேலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

First published:

Tags: Local News, Tirunelveli