முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை கிருஷ்ணாபுரம் திருக்கோயிலில் சிற்பத்தை வரையும் ஓவிய பயிற்சி வகுப்பு!

நெல்லை கிருஷ்ணாபுரம் திருக்கோயிலில் சிற்பத்தை வரையும் ஓவிய பயிற்சி வகுப்பு!

X
ஓவிய

ஓவிய பயிற்சி வகுப்பு

Sculpture Painting Training : திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கோயிலில் சிற்பங்களைப் பார்த்து ஓவியம் வரையும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

  • Last Updated :
  • Tirunelveli, India

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலில் உள்ள சிற்பங்களை பார்த்து வரையும் சிற்ப ஓவிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 

நெல்லை அரசு அருங்காட்சியகமும் சிவராம் கலைக்கூடமும் இணைந்து தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிருஷ்ணாபுரம் ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோவிலில் உள்ள பழந்தமிழர்களின் சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் சிற்பங்களை பார்த்து வரையும் சிற்ப ஓவிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த பயிற்சியினை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் சிவராம் கலைக்கூடத்தின் தலைமை பயிற்சியாளர் ஓவியர் கணேசன், ஓவிய ஆசிரியர்கள் பூமி பாலகன், திருவனந்தம் மற்றும் கும்பகோணம் கவின் கலை மாணவர் மகராஜன் ஆகியோர் மாணவர்களுக்கு கிருஷ்ணாபுரம் கோயில் கோபுரம், மற்றும் சிற்பங்களை பார்த்து வரையும் பயிற்சியினை நடத்தினர்.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நெல்லை மாவட்ட காப்பாட்சியர், பதினாறாம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த சிற்பங்களின் சிறப்புகளை பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் ஒரு நல்ல முயற்சியாக இப்பயிற்சி நடத்தப்படுகிறது என்றார்.

இதையும் படிங்க : மதுரை மக்களுக்கு குட்நீயூஸ் சொன்ன ரயில்வே.. வரும் 17ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்!

பயிற்சியினை ஒருங்கிணைத்து நடத்திய தலைமை பயிற்சியாளர் ஓவியர் கணேசன் அவர்கள் கூறுகையில், சிற்பங்களை பார்த்து வரையும் பொழுது மாணவர்களுக்கு அவற்றின் நுணுக்கங்களை எளிதாக அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதில், ஏராளமான மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நொச்சிக்குளம் ஊராட்சி உட்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு இலவச ஓவிய பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில், கிருஷ்ணாபுரம் நொச்சிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வேலம்மாள் ஸ்ரீனிவாசன் மற்றும் முத்து சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Local News, Tirunelveli