திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் புதுமை அறிவியல் கண்காட்சி தொடங்கியது.
எம்.டி.டி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதுமை அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சி 2023 புதன்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கண்காட்சியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முன்னதாக கண்காட்சி இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வை தலைமையாசிரியர் உலகநாதன் வரவேற்றார். பள்ளிச் செயலர் செல்லையா தலைமை வகித்தார். மாவட்ட அறிவியல் அலுவலர் முத்துக்குமார் இலச்சினையை வெளியிட்டார். கல்வி சங்க ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சண்முகம், பேட்டை மதிதா இந்து கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன், பள்ளி மேலாளர் சட்டநாதன், உதவித் தலைமை ஆசிரியர் பகவதி, ஓவிய ஆசிரியர் சொக்கலிங்கம் உட்பட பலர் அதில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் அப்பள்ளி மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்பம், உணவுப் பொருட்கள் குறித்த கண்டுபிடிப்புகள் குறித்து விளக்கிப் பேசினர். குறிப்பாக ஏடிஎம் போல் இருக்கும் அட்டைப்பெட்டியில் இருந்து காயின் வருதல், டான்சிங் பலூன், பேட்டரி மூலம் இயங்கும் லைட் ஃபேன் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. மேலும் மின் கடத்தும் கடத்தா பொருட்கள், உணவுப் பொருட்களில் உள்ள புரத சத்துக்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தலைவர்களின் வரலாறு உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. இதே போன்று கைதட்டினால் எரியும் லைட், பேப்பர் தொழிற்சாலையில் இயங்கும் மிஷின், வெளிச்சத்தை வைத்து தானாக எரிந்து ஆஃப் ஆகும் வகையில் செய்யப்பட்ட கருவி உள்ளிட்டவைகளும் இடம்பெற்று இருந்தன.
இது மட்டுமல்லாமல் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்ல கூடிய வாகனம், தானாக இயங்கக்கூடிய ரோபோட்டிக் உள்ளிட்டவற்றையும் மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். இந்த கண்காட்சியில் திருநெல்வேலியில் உள்ள மற்ற பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Science, Tirunelveli