முகப்பு /திருநெல்வேலி /

பயன்பாடற்ற பொருள்களிலிருந்து பொம்மைகள் செய்தல்- ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

பயன்பாடற்ற பொருள்களிலிருந்து பொம்மைகள் செய்தல்- ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

X
பொருள்கள்

பொருள்கள் செய்யும் மாணவர்கள்

Tirunelveli | திருநெல்வேலியிலுள்ள அறிவியல் மையத்தில் பயன்பாடற்ற பொருள்களிலிருந்து பொம்மைகள் செய்யும்போட்டி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் நடந்த அறிவியல் பொம்மைகள் செய்தல் போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடத்தை பிடித்தனர். இரண்டாம், மூன்றாம் இடத்தை தனியார் பள்ளிகள் பிடித்தன.

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தின் ஆண்டு விழாவையொட்டி ஆறு முதல் பிளஸ் ஒன்வரை பயிலும் மாணவர், மாணவிகளுக்காக பயன்பாடற்ற பொருட்களில் இருந்து அறிவியல் பொம்மைகள் செய்தல் போட்டி நடைபெற்றது. ஒரு பள்ளியில் இருந்து ஒரு குழு பங்கேற்றனர். அதாவது இரண்டு மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இவர்கள் பயன்பாடற்ற பொருட்களில் இருந்து பொம்மைகள் செய்ய வேண்டும். அதில் அறிவியல் நுட்பத்தை பயன்படுத்தி இருக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து அறிவுரை வழங்கப்பட்டன.

இதில் அல் மதீனா பப்ளிக் ஸ்கூல், புஷ்பலதா பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் ஸ்கூல், ஜவகர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 14 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கண்காட்சியில் மாணவர்கள்

மாவட்ட அறிவியல் மையத்தின் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் 14 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களின் படைப்புகளை அந்த இடத்திலேயே செய்து காண்பித்தனர்.

தொடர்ந்து மாணவ, மாணவிகளிடம் அவர்கள் செய்த பொருள்கள் குறித்து விளக்கங்களை அதிகாரிகள் கேட்டறிந்தனர். சரியாக விளக்கிய மாணவ, மாணவிகள் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

கோடையில் ஜில்லென்று குளித்து மகிழ நெல்லை மாவட்டத்தில் உள்ள தேங்காய் உருளி அருவிக்கு ஒரு ட்ரிப் போகலாம்!

அதில் முதல் இடத்தை ஜவகர் அரசு உயர்நிலைப்பள்ளி, இரண்டாம் இடத்தை அல்-மதீனா பப்ளிக் ஸ்கூல், மூன்றாம் இடத்தை புஷ்பலதா பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் ஸ்கூல் பிடித்தன. இந்த ஏற்பாடுகளை மாவட்ட அறிவியல் மையத்தின் அதிகாரிகளான குமார் மற்றும் லெனின் ஆகியோர் செய்திருந்தனர்.

First published:

Tags: Local News, Tirunelveli