முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை வஉசி மைதான சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்கள்.. கைவண்ணத்தை காட்டிய மாணவிகள்!

நெல்லை வஉசி மைதான சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்கள்.. கைவண்ணத்தை காட்டிய மாணவிகள்!

X
பள்ளி

பள்ளி மாணவர்கள்

Nellai paintings | பாளை வஉசி மைதான சுவர் ஓவியங்கள் வரைவதில் பள்ளி மாணவிகள் பங்கேற்று அசத்தியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli | Tirunelveli

பாளை வ.உ.சி மைதான சுவரில் நீர் பறவைகளின் ஓவியங்களை வரைந்து வண்ணமாக்கிய மாணவிகள் தாங்கள் இதன் மூலம் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பாளை வ.உ.சி மைதானம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த மைதான சுவரில் போஸ்டர் ஒட்டுவது, வாசகம் எழுதுவது போன்ற செயல்களை தவிர்க்கவும், சுவரை அழகூட்டவும் மற்றும் பயனுள்ள தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் வண்ண ஓவியங்களை வரைவதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டார். மாவட்ட நிர்வாக நிதி திட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டது.

ஏட்ரி அமைப்பின் மதிவாணன், நேச்சர் கிளப் தலைவர் பிரான்சிஸ் சிவராமன், கலைக்கூட ஓவியக்கலை மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து நீர்ப் பறவைகளின் தத்துரூப ஓவியங்களை வரைந்தனர். அந்த பறவைகளின் பெயர்கள் உள்ளிட்ட விபரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளதால் இதை பலரும் பார்த்து செல்கின்றனர். சுவரும் புதிய அழகு பெற்றுள்ளது . குறிப்பாக நீர்ப்பறவைகளில் ஓவியங்களை வரைந்த மாணவிகளான தீக்ஷனா, சூடாமணி, ஜுவெல்லிட்டா, மதனா, ஸ்ரீநிதி ஆகியவரிடம் பேசினோம்.

அதற்கு அவர்கள் பறவைகளை தாங்கள் நீர்நிலைகளில் மட்டுமே பார்த்ததாக தெரிவித்தனர். வ.உ.சி மைதான சுவரில் நீர்ப்பறவைகளின் ஓவியங்களை வரைந்ததன் மூலம் பல்வேறு புதிய விஷயங்களை கற்றுக் கொண்டதாக தெரிவித்தனர். சிவராம் கலைக்கூட நிர்வாகி கணேசன் 2015 ஆம் ஆண்டு 32 விதமான பொருட்களைக் கொண்டு அப்துல் கலாமின் ஓவியத்தை வரைந்ததால் வெகுமதி பெற்றார்.

சமீபத்தில் முதலமைச்சர் தென்காசி வந்தபோது அவரை வரவேற்று 100 வடிவங்களில் முதலமைச்சரின் உருவத்தை வரைந்தார். ஆயிர அடி நீளம் பிளக்ஸ்ஸில் இளையராஜாவின் ஓவியத்தை வரைந்து வாழ்த்து பெற்றவர் கணேசன். நெல்லையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதில் தன்னார்வலர்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட்டுள்ளனர். இதனை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மாணவிகள் வஉசி மைதான சுவரில் நீர் பறவைகளின் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளனர்.

First published:

Tags: Local News, Painting, Tirunelveli