முகப்பு /திருநெல்வேலி /

அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் இருக்கவேண்டும்.. நெல்லை கலெக்டர் உத்தரவு..

அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் இருக்கவேண்டும்.. நெல்லை கலெக்டர் உத்தரவு..

மாதிரி படம்

மாதிரி படம்

Nellai District Schools : நெல்லை மாவட்டத்தில் பள்ளி திறப்பதற்கு முன்பாக அனைத்து கட்டிடங்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி திறப்பதற்கு முன்பாக அனைத்து கட்டிடங்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படுகிறது.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனவே கோடை விடுமுறை காலத்தில் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன இது தவிர அரசு உதவி பெறும் பள்ளிகளை சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

நெல்லை,பாளையங்கோட்டை ,மானூர் ,சேரன்மகாதேவி ,அம்பாசமுத்திரம் ,நாங்குநேரி, திசையன்விளை ,ராதாபுரம் ஆகிய எட்டு தாலுகாக்களிலும் தாசில்தார்கள் தலைமையில் வருவாய் துறையினர் அடங்கிய குழுஆய்வு செய்து வருகின்றனர் இவர்களுடன் தீயணைப்பு துறை கல்வி அதிகாரிகளும் சேர்ந்து பணி செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நெல்லை மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளும் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு பழுதடைந்த வகுப்பறை கட்டடங்கள் மற்றும் இதர கட்டடங்கள் வரும் 2023- 24 ஆம் கல்வியாண்டில் பள்ளி திறப்பதற்கு முன்பாக சரி செய்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது நெல்லை மாவட்டத்தில் அமையப்பட்டுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் மற்றும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டிடங்களின் தன்மை குறித்து சம்பந்தப்பட்ட தீயணைப்பு துறை அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் தாசில்தார்கள் மூலம் ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Tirunelveli