முகப்பு /திருநெல்வேலி /

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 அறிவிப்பு.. நெல்லைப் பெண்கள் மகிழ்ச்சி!

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 அறிவிப்பு.. நெல்லைப் பெண்கள் மகிழ்ச்சி!

X
மாதிரி

மாதிரி படம்

Tirunelveli district | குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து திருநெல்வேலை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 2ஆவது முழுமையான பட்ஜெட்டாகும். 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார்.

இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம் ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 முதல் தொடங்கி வைக்கப்படும் என்றும், இதற்காக 7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது, தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘

இந்நிலையில் 1000 ரூபாய் வழங்குவதற்கு குறித்து, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், முதியோர் உதவித்தொகை அதிகப்படுத்தியதற்கும் நெல்லை பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதுகுறித்து குடும்பத் தலைவி மீனா கூறுகையில், சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் வழங்குவதாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இது செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. இதற்காக 7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கேள்விப்பட்டோம் இது மகிழ்ச்சி அளிக்கிறது.

இருப்பினும் தகுதி வாய்ந்த பெண்கள் என்று குறிப்பிட்டுள்ளனர் அது என்ன என்று புரியவில்லை. இது பிரிவினையை ஏற்படுத்தும். எனவே, அனைத்து பெண்களும் தகுதியானவர்களே. எனவே, அனைவருக்கும் 1000 ரூபாய் அரசு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

top videos

    இந்நிலையில் முதியோர் உதவித் தொகை குறித்து கருத்து தெரிவித்தமேரி, முதியோர் உதவித்தொகை முதலில் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆனாலௌ, தற்போது 500 ரூபாய் அதிகப்படுத்தப்பட்டுள்ளது இதன் மூலம் 1500 ரூபாய் கிடைக்கிறது இது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

    First published:

    Tags: Local News, Nellai, Tirunelveli, TN Budget 2023