முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய டீன் பொறுப்பேற்பு          

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய டீன் பொறுப்பேற்பு          

நெல்லை டீன்

நெல்லை டீன்

சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வராக பணியாற்றிய டாக்டர் ரேவதி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டார்.   

  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக டாக்டர் ரேவதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நோயாளிகள் அதிக அளவில் வந்து செல்லும் மருத்துவமனையாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திகழ்கிறது. இதன் அருகே தற்போது பல்நோக்கு மருத்துவமனை தனி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

நெல்லை அரசு மருத்துவமனையில் தினமும் சராசரியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையின் முதல்வராக பணியாற்றி வந்த டாக்டர் ரவிச்சந்திரனின் பதவி காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து துணை முதல்வரான டாக்டர் சுரேஷ் பொறுப்பு முதல்வராக பணிகளை கவனித்து வந்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வராக பணியாற்றிய டாக்டர் ரேவதி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் ஏற்கனவே நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை முதல்வராக பதவி வகித்தவர். பின்னர் பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியாற்றினார். அங்கிருந்து சிவகங்கைக்கு மாற்றப்பட்ட அவர், தற்போது நெல்லைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Tirunelveli