முகப்பு /திருநெல்வேலி /

ஆட்டோ ஓட்டுநர்களுடன் இணைந்து குடியரசு தின விழாவை கொண்டாடிய ரயில் நிலைய ஊழியர்கள்

ஆட்டோ ஓட்டுநர்களுடன் இணைந்து குடியரசு தின விழாவை கொண்டாடிய ரயில் நிலைய ஊழியர்கள்

X
கொடியேற்றம்

கொடியேற்றம்

Tirunelveli | நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுடன் இணைந்து ரயில் நிலைய ஊழியர்கள் குடியரசு தின விழாவைக் கொண்டாடினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பி அருகே ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நிலைய மேலாளர் ஆர்.முருகேசன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன், நிலைய மேற்பார்வையாளர் பாஸ்கர், சபாபதி, நந்தி, கிஷோர், மீனா உள்ளிட்டோர் வந்தனர். பின்னர் நிலைய மேலாளர் ஆர் முருகேசன் தேசிய கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து ரயில் நிலைய அதிகாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், ரயில் பயணிகள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். மேலும் ரயில் நிலைய அதிகாரிகள் தேசிய கீதம் பாடினர். இதையடுத்து அங்கிருந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இது குறித்து பேசிய நிலைய மேலாளர் முருகேசன் கூறுகையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் சார்பில் 74 ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது. ரயில்வே நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தேசிய கொடிக்கு சல்யூட் அடித்து காந்திமதி யானை மரியாதை..! நெல்லையப்பர் கோயிலில் குடியரசு தினம் கொண்டாட்டம்

இதில் கலந்துகொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள், ரயில் பயணிகளுக்கு நன்றி. அனைத்து மக்களுக்கும் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் சார்பில் 74 வது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Tirunelveli