சிலம்பப் போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்த கல்லூரி மாணவியான ஜெய சுந்தரி, திருநெல்வேலி மாவட்டம்கங்கைகொண்டான் பகுதியில் பள்ளி மாணவிகளை சிலம்பம் வீராங்கனைகளாக உருவாக்குவதற்கு பயிற்சி கொடுத்து வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய சுந்தரி. இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 6ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பொழுது பள்ளியில் விளையாடும் சக மாணவர்களை பார்த்து சிலம்பத்தின் மீது ஆர்வமானார். அதற்காக கங்கைகொண்டான் பகுதியில், போதிய பயிற்சி கிடைக்கவில்லை இருப்பினும் தனது தந்தையுடன் சற்று தொலைவில் உள்ள தாழையித்து பகுதியில் சிலம்ப மாஸ்டரிடம் இவர் சிலம்பம் கற்க ஆரம்பித்தார்.
சிறு வயதாக இருக்கும் பொழுது மதர் தெரசா ஸ்கூல், கேம்பிரிட்ஸ் ஸ்கூல் எம்.டி.டி. ஸ்கூல் உள்ளிட்ட பள்ளிகளில் மாவட்ட அளவில் சிலம்பம் போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளார். பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்க ஆரம்பிக்க, இவருக்கு மாநில அளவில் சிலம்ப போட்டியில் விளையாட ஆர்வம் ஏற்பட்டது.
Read More : காதலியிடம் மோசடி செய்து சிக்கிய இளைஞர்... திருமணம் நின்றதால் விரக்தியில் விபரீத முடிவு
பின்னர், முறையாக பயிற்சிகளை மேற்கொண்டு, திருச்செந்தூர், கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் நடந்த சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு, மாநில அளவில் முதல் பரிசை வென்று சாதனை படைத்தார். தாயும் தந்தையும் கொடுத்த உற்சாகத்தில் சிலம்பம் போட்டியில் அதிக கவனத்தை செலுத்தினார்.
இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்துகொண்டார். அதில் சிலம்பம், இரட்டைக் கம்பு வீச்சு, சுருள்வாள் வீச்சு மற்றும் வால் வீச்சு போன்ற போட்டிகள் நடந்தன அதிலும் இவர் முதல் பரிசு வென்று வெற்றி கண்டுள்ளார்.
இதற்காக இவர் அதிகாலை 4 மணிக்கே எழுந்து பயிற்சியில் ஈடுபடுவார். கங்கைகொண்டான் பகுதியிலேயே முதல் சிலம்பம் சுற்றும் வீராங்கனை இவர்தான் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், தனக்குத் தெரிந்த இந்த கலையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், அதையும் முறையாக செய்து வருகிறார்.
இவரிடம் பள்ளி மாணவ மாணவிகள் 60க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். குறிப்பாக, சிலம்பம் கற்றுக் கொடுப்பதில் மாணவிகளே அதிகம் விருப்பத்தோடு முன் வருகின்றனர் என அவர் கூறுகிறார். மேலும், கல்லூரி அளவில் இவர் சிலம்பம் போட்டியில் உலக அளவில் விளையாட பயிற்சி எடுத்து வருகிறார். கல்லூரியில் படித்துக் கொண்டே சிலம்பம் போட்டியிலும் தேசிய அளவில் வெற்றி பெற்று கங்கைகொண்டான் பகுதியில் பல மாணவிகளை சிலம்பம் வீராங்கனைகளாக உருவாக்குவதற்கு பயிற்சி கொடுத்து வருகிறார் இந்த சாதனைப்பெண் ஜெய சுந்தரி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thirunelveli