முகப்பு /திருநெல்வேலி /

புதுப்பொலிவுடன் மினு மினுக்கும் நெல்லை ரத்னா தியேட்டர்..

புதுப்பொலிவுடன் மினு மினுக்கும் நெல்லை ரத்னா தியேட்டர்..

X
புதுப்பொலிவுடன்

புதுப்பொலிவுடன் மினு மினுக்கும் நெல்லை ரத்னா தியேட்டர்

Rathna Theatre Reopen In Nellai | புதுப்பொலிவுடன் நெல்லை ரத்னா தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில் உள்ள ரத்னா தியேட்டர் 70 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. 1954ம் ஆண்டு சங்கர் ரெட்டியார் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அவரை தொடர்ந்து ராமகிருஷ்ணா என்பவர் தியேட்டரை நடத்தினார். தற்போது 3வது தலைமுறையாக ரவிசங்கர் இந்த தியேட்டரை நிர்வகித்து வருகிறார்.

இந்த திரையரங்கில் பல எம்.ஜி.ஆர் படங்கள் 100 நாட்களை கடந்து ஓடி உள்ளன. எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் மட்டுமல்லாமல் ரஜினி, கமலின் பல்வேறு படங்களும் இந்த திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளன. குறிப்பாக விஜய் நடித்த போக்கிரி, சர்க்கார், வாரிசு போன்ற படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

புதுப்பொலிவுடன் மினு மினுக்கும் நெல்லை ரத்னா தியேட்டர்

அதேபோல் அஜித் நடித்த துணிவு, விஸ்வாசம் போன்ற திரைப்படங்களும் இந்த தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளன.  கடைசியாக இந்த தியேட்டரில் காந்தாரா திரைப்படம் திரையிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து 3 மாதங்களாக தியேட்டரை புதுப்பிக்கும் பணியில் அதன் நிர்வாகம் ஈடுபட்டது. தற்போது புதுப்பொலிவுடன் தியேட்டர் தயாராகி உள்ளது. அதாவது திரையரங்கில் சீட் லைட் சிஸ்டம், சவுண்ட் சிஸ்டம், ஸ்கிரீன் கேண்டீன் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த தியேட்டர் நேற்று (ஏப்ரல் 28ம் தேதி) முதல் புதுப்பொலிவுடன் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்நிலையில் 70 ஆண்டுகளாக ரத்னா தியேட்டருக்கு தந்த ஆதரவை தொடர்ந்து தருமாறு அதன் உரிமையாளர் ரவிசங்கர் கேட்டுக்கொண்டார்.

First published:

Tags: Local News, Tirunelveli