முகப்பு /திருநெல்வேலி /

ரமலான் நோன்பு.. நெல்லையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

ரமலான் நோன்பு.. நெல்லையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

X
நெல்லையில்

நெல்லையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

Ramadan Fasting | ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு  இஸ்லாமியர்கள் அனைவரும்  ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து திருநெல்வேலி டவுனில் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

  • Last Updated :
  • Tirunelveli, India

ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு திருநெல்வேலியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். அதனைத் தொடர்ந்து, ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இதற்கான பிறை தெரியும் நாளில், நோன்புதொடங்குவதற் கான அறிவிப்பை அரசு தலைமை காஜி வெளியிடுவார். இந்நிலையில், மார்ச் 24ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மார்ச் 22ஆம் தேதி ரமலான் மாதபிறை தமிழகத்தில் தென்படவில்லை. ஆகையால் வெள்ளிக்கிழமை (மார்ச் 24ம் தேதி) அன்று ரமலான் மாதம் தொடங்கும் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் அனைவரும் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர். அதன்படி, திருநெல்வேலி டவுன் போத்தீஸ் கடை அருகேயுள்ள சிறப்பு வாய்ந்த பள்ளிவாசலில் தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    First published:

    Tags: Local News, Tirunelveli