முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் மழைநீர் விழிப்புணர்வு போட்டி.. அசத்திய குழந்தைகள்!

நெல்லையில் மழைநீர் விழிப்புணர்வு போட்டி.. அசத்திய குழந்தைகள்!

விழிப்புணர்வு போட்டி

விழிப்புணர்வு போட்டி

Tirunelveli | நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற மழை நீர்  விழிப்புணர்வு போட்டிகளில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் திருநெல்வேலி மாவட்ட நேரு யுவகேந்திரா, கர்ப்ப விருட்சக நற்பணி மன்றத்துடன் இணைந்து பள்ளி கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு மழை நீர் தொடர்பான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தலைமையேற்று துவக்கி வைத்தார். நீரின்றி என்கிற தலைப்பில் ஓவிய போட்டியும், நாளைய தலைமுறைக்கு நீர் என்கிற தலைப்பில் கட்டுரை போட்டியும், நீர் விட்டு செல்வீரா நீரைஎன்கிறதலைப்பில் பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் நெல்லை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி ,கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஓவியர் தங்கவேலு, ராமகிருஷ்ணன், திரிபுரசுந்தரி, லீலா ரோஸ், செல்வ மாரிமுத்து,சுபா, பகவதி ஆகியோர் போட்டிகளில் நடுவர்களாக இருந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பாபநாசம் அரசு கலைக்கல்லூரியின் நூலகர் பாலச்சந்திரன்,சங்கர், மாரியப்பன், கார்த்திகேயன், உமாசங்கரி, சிராஜ், ரம்யாஆகியோர் கலந்து கொண்டனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Rain water, Tirunelveli