முகப்பு /திருநெல்வேலி /

திருநெல்வேலி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : 22 மனுக்களுக்கு தீர்வு

திருநெல்வேலி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : 22 மனுக்களுக்கு தீர்வு

பொதுமக்கள் குறைதீர்க் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்க் கூட்டம்

முந்தைய வாரங்களில் நடந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நிலுவையில் இருந்த 35 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டன.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தலைமையில் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டன. அப்போது பேசிய அவர் பெறப்பட்ட மனுக்களை மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் முந்தைய வாரங்களில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் நிலுவையில் இருந்த 35 மனுக்களின் மனுதாரர்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டனர். மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னபாஸ், குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பொன்.ரகு, தலைமையில் மனுதாரர்களிடம் மனுக்கள் விசாரிக்கப்பட்டு 22 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. 

First published:

Tags: Local News, Tirunelveli