ஹோம் /திருநெல்வேலி /

திருநெல்வேலி - வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

திருநெல்வேலி - வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

X
வட்டாட்சியர்

வட்டாட்சியர் அலுவலகம்

Tirunelveli | திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற குறைதீர் முகாம்கள் மூலம் மக்கள் பயன்பெற்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்து இருந்தார்.

இதில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல்,குடும்ப அட்டையில் கைபேசி எண் பதிவு, கைபேசி எண் மாற்றம் செய்தல் தொடர்பாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் பொது விநியோகத் திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்து புகார் அளிக்கலாம் எனவும் கூறப்பட்டது.

குறைதீர் முகாம்

அதன்படி திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், மானூர், சேரன்மகாதேவி, திசையன்விளை ஆகிய தாலுகாக்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் தங்களின் குடும்ப அட்டையில் உள்ள பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவை குறித்து வட்ட வழங்கல் அலுவலர் பழனியிடம் மனு அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் - பார்த்து என்ஜாய் பண்ணுங்க

பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டும் 35க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதை போல் நெல்லையில் உள்ள மொத்தம் எட்டு தாலுகாக்களில் சுமார் 172 மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தியாளர்: சந்தானம், திருநெல்வேலி.

First published:

Tags: Local News, Tirunelveli