முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்..

நெல்லையில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்..

X
நெல்லையில்

நெல்லையில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்

Public Distribution Scheme Grievance Camp in Nellai |பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோக திட்டம் மக்கள் குறைதீர் முகாம் நடத்த மாவட்ட அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்திருந்தார்.

இதில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டையில் கைபேசி எண் பதிவு, கைபேசி எண் மாற்றம் செய்தல் தொடர்பாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதேபோல் பொது விநியோகத் திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

நெல்லையில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்

தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்து புகார் அளிக்கலாம் எனவும் கூறப்பட்டது. அதன்படி திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், மானூர், சேரன்மகாதேவி, திசையன்விளை ஆகிய தாலுகாக்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் தங்களின் குடும்ப அட்டையில் உள்ள பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவை குறித்து வட்ட வழங்கல் அலுவலர் பழனியிடம் மனு அளித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதேபோல் நெல்லையில் உள்ள மொத்தம் எட்டு தாலுகாக்களில் சுமார் 200 மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Local News, Tirunelveli