முகப்பு /திருநெல்வேலி /

பெண்களே இந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தால் உஷாரா இருங்க.. எச்சரிக்கை விடுக்கும் நெல்லை மருத்துவர்..

பெண்களே இந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தால் உஷாரா இருங்க.. எச்சரிக்கை விடுக்கும் நெல்லை மருத்துவர்..

X
மாதிரி

மாதிரி படம்

PCOD Treatment | பெண்களுக்கு உண்டாகும் பிசிஓடி பிரச்சனைகள் குறித்து நெல்லையை சேர்ந்த மருத்துவர் எச்சரித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் பிசிஓடி பிரச்சனை குறித்து விளக்கமளிக்கிறார்.

பிசிஓடி என்றால் என்ன?

பிசிஓடி என்பது கருப்பையில் கட்டிகள், இன்சுலின் செயல்திறன் பாதிப்பு, குழந்தையின்மை, ஒழுங்கற்ற மாதவிலக்கு, ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பு இதன் காரணங்கள் என்று திருநெல்வேலியை சேர்ந்த தனியார் மருத்துவர் விசாலாட்சி தெரிவித்தார். உடலில் ஆன்ட்ரோஜென் என்ற ஆண்தன்மை ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதனால் சினைப்பையில் நீர்கட்டிகள் ஏற்படுகின்றன போன்ற பல்வேறு தகவல்களை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

மருத்துவர் விசாலாட்சி

பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

மேலும் அவர் கூறுகையில், “பிசிஓடி உள்ள பெண்களுக்கு சினை முட்டைகள் முதிர்ச்சி அடைய தேவையான ஹார்மோன்கள் சுரப்பதில்லை. சினை முட்டைகள் முழு வளர்ச்சி அடையாமல், சிறிதளவு வளர்ந்து நீர் நிறைந்தகட்டிகளாக நின்று விடுகின்றன. முட்டைகள் முதிர்ச்சி அடையாததால் ஒவியுலேசன் நடப்பதில்லை. இந்த ஹார்மோன் இல்லாமல் போனால், பெண்ணின் மாத சுழற்சியும் நின்று விடும்.

உடனே என்ன செய்யவேண்டும்?

இதனால் பெண்களுக்கு மாதவிலக்கே வராமல் போவது, உடல் பருமன் அடைவது, உடலில் முடிவளர்ச்சி இருப்பது மற்றும் முகப்பரு போன்ற தோல் தொடர்பான வியாதிகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே பிசிஓடி போன்ற பிரச்சனைகள் பெண்களுக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்” என தனியார் மருத்துவர் விசாலாட்சி கேட்டுக்கொண்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Lifestyle, Local News, Tirunelveli