மணிரத்தினம் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பொன்னியின் செல்வன் படம் 2 பாகங்களாக உருவானது. முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 28ம் தேதி) பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அதன்படி, திருநெல்வேலியில் ராம் முத்துராம் திரையரங்கில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. படம் முடிந்த பின்பு வெளியே வந்த ரசிகர்கள் படம் குறித்து உற்சாகமாக கருத்து தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது, நாவலாக நாம் படித்த கதையை மணிரத்தினம் திரைப்படமாக நம் அனைவருக்கும் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க : "பாண்டிய நாட்டு மக்களின் மனதை வென்ற ஆதித்த கரிகாலன்" விருதுநகர் ரசிகர்கள் கருத்து!
நிச்சயம் இவரை தவிர இதை வேறு யாராலும் செய்திருக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளார். ஒவ்வொருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர், குறிப்பாக ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம், கார்த்திக், ஐஸ்வர்யா ராய் ஆகிய 5 பேர் தான் பொன்னியின் செல்வன் படத்தில் தூண்கள். முதல் பாகத்தில் விக்ரமிற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்ற பேச்சு இருந்தது. அதனை சரிசெய்ய 2ம் பாகம் முழுக்கவே விக்ரம் தான் படத்தை தாங்கி பிடிக்கிறார்.
ஆதித்ய கரிகாலனாகவே வாழ்ந்துள்ளார் என்றே கூறலாம். அருள்மொழி வர்மனாக இருந்து ராஜராஜ சோழனாக மாறும் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. ஒரு ராஜா எப்படி இருப்பார் என்பதை தன்னுடைய உடல் மொழி மூலம் சொல்லி இருக்கிறார் ஜெயம் ரவி. அழகின் மறு உருவமாக திரிஷா திரையில் ஜொலிக்கிறார். பின்னணி இசை மற்றும் பாடல்களில் ஏ.ஆர். ரஹ்மான் அசத்தியுள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
புத்தகத்தை வாசித்து விட்டு பொன்னின் செல்வன் படத்தை பார்க்க செல்பவர்களுக்கு நிறைய கேள்விகளும், குறைகளும் எழலாம். காரணம் பொன்னியின் செல்வன் நாவலின் பல முக்கியமான கதைகளை மாற்றி அமைத்துள்ளார் மணிரத்தினம் என்ன அவர்கள் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ponniyin selvan, Tamil Cinema, Tirunelveli