திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சார்பு ஆய்வாளர் காவலர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அதன் உதவி இயக்குனர் சகாய ஆண்டனி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் காவல்துறையில் 621 சார்பு ஆய்வாளர்கள், தீயணைப்புத்துறையில் 129 நிறைய அதிகாரி காலி பணியிடங்களுக்கான தேர்வின் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
இப்போட்டி தேர்வுக்கு தயாராகும் திருநெல்வேலி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறிவழிகாட்டு மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் சனி வரை காலை 10:30 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : சிறுபான்மையினருக்கு கடனுதவி - நெல்லை கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..
இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படுகிறது. மேலும் வாரம்தோறும் மாதிரி தேர்வுகளும் நடைபெறுகின்றன. விரைவில் 2ம் நிலை காவலர் tnpsc குரூப் 4 தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் bit.ly/siclass என்ற இணைய முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 17 சி, சிதம்பரம் நகர், பெருமாள்புரம் என்ற முகவரியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் அல்லது 04622532938 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என கூறியுள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli