முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் 2ம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு..

நெல்லையில் 2ம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு..

X
காவலர்களுக்கான

காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு

Physical Fitness Test for Secondary Constables : திருநெல்வேலியில் 2ம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய தீயணைப்புத்துறை, சிறைத்துறை, காவல்துறை 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஆண்களுக்கு ஆயுதப்படை மைதானத்திலும், பெண்களுக்கு தனியார் கல்லூரி மைதானத்திலும் உடற்தகுதி தேர்வுகள் தொடங்கியது. இதற்காக 1,159 ஆண்களும் 544 பெண்களுக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டது.

ஆயுதப்படை மைதானத்தில் முதல் நாளில் 351 பேர் கலந்துகொண்ட நிலையில் 2வது நாளில் 400க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 340 பேர் கலந்துகொண்டனர். அவர்களது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உயரம், எடை அளவீடு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டி நடந்தது. இதனை நெல்லை சரக ஜஜி பிரவேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதேபோல் தனியார் கல்லூரி மைதானத்திலும், பெண்களுக்கான 2ம் நிலை காவலர்களுக்கான போட்டியும் நடத்தப்பட உள்ளன. இந்த உடல் தகுதி தேர்வில் ஆண்கள், பெண்கள் மட்டுமல்லாமல் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களும் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Tirunelveli