முகப்பு /திருநெல்வேலி /

புதிய கழிவு நீரோடை அமைத்து தர கோரி மனு.. அரசு அலுவலர்களுக்கு நெல்லை மேயர் முக்கிய அறிவுரை!

புதிய கழிவு நீரோடை அமைத்து தர கோரி மனு.. அரசு அலுவலர்களுக்கு நெல்லை மேயர் முக்கிய அறிவுரை!

அரசு அலுவலர்களுக்கு நெல்லை மேயர் முக்கிய அறிவுரை

அரசு அலுவலர்களுக்கு நெல்லை மேயர் முக்கிய அறிவுரை

Tiunelveli News : திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் மனு நாள் முகாம் நடைபெற்றது இதில், புதிய கழிவு நீரோடை அமைத்து தர கோருதல் உள்ளிட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் மேயர் சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் மனு நாள் முகாம் நடைபெற்றது. இதில் துணை மேயர் கே ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது,இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் கழிவு நீரோடையினை சீரமைத்து தர கோரிக்கை விடுத்தனர். நைனார் குளம் நீர் பாசன உதவி செயலாளர் முருகன் அளித்த மனுவில் நயினார் குலத்திற்கு வரும் கால்வாயில் குப்பைகள் கொட்டாமல் இருக்க டைமண்ட் கம்பி வேலி அமைத்திட கோரிக்கை விடுத்தார்.

முப்பத்தி ஒன்பதாவது வார்டு மாமன்ற உறுப்பினர் சீதா அளித்த மனுவில், ஆணையாளர் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்திக்க தொட்டியில் இருந்து மகாராஜா நகர் நான்கு மற்றும் ஐந்தாவது குறுக்கு தெருகளுக்கு குடிநீர் வழங்கும் பகிர்மான குழாய் மூன்றாவது மெயின் ரோட்டில் உள்ள குழாய்களை சீரமைத்து சீரான குடிநீர் வழங்கும் வகையில் மகாராஜா நகர் ரவுண்டான வரை உள்ள மெயின் பைப் லைனை மாற்றிடவும் மாநகராட்சி பூங்காவில் உள்ள மின்விளக்குகளை எரிய செய்திடவும் கோரிக்கை விடுத்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

33வது வார்டு மாமன்ற உறுப்பினர் லட்சுமி உமாபதி சிவன் அழித்த மனுவில், தனது வார்டில் பல இடங்களில் கழிவுநீருடை பழுதடைந்து உள்ளதால் புதிய கழிவுநீருடன் அமைத்து தரவும் மனு அளித்தார். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட மேயர் சரவணன் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் இந்த கூட்டத்தில் உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

First published:

Tags: Local News, Tirunelveli