முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் சுட்டெரிக்கும் கோடை வெயில்.. பொதுமக்கள் கடும் அவதி!

நெல்லையில் சுட்டெரிக்கும் கோடை வெயில்.. பொதுமக்கள் கடும் அவதி!

X
மாதிரி

மாதிரி படம்

Tirunelveli summer heat | திருநெல்வேலியில், கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடத்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. இதனால், பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் குறைந்தது.

நெல்லையில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது இதனால், அதிகபட்சமாக 100.4 டிகிரி வரை வெயில் பதிவாகி இருந்தது. அதாவது அக்னி நட்சத்திர நாட்களில் அடிக்கின்ற வெயிலை போல் நெல்லையில் இப்போதே வெயில் அடிக்கிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசுகிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் சிரமப்பட்டு செல்லவேண்யுள்ளது. துணியால் தலையை மூடியும், கொடையுடனும் சாலையில் பொதுமக்கள் செல்கின்றனர்.

ALSO READ | உலக புத்தகதின விழா.. புத்தகங்கள் குறித்து சிறப்பாக பேசிய நெல்லை சிறுவர்கள்!

வெயிலின் தாக்கத்தால் குளிர்பான பானங்களை விற்பனை செய்யும் கடைகளில் இளநீர், தர்பூசணி, நொங்கு போன்றவற்றை பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். மேலும் மண்பானை கடைகளிலும் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Summer Heat, Tirunelveli