முகப்பு /திருநெல்வேலி /

திருநெல்வேலியில் திடீரென கொட்டிய மழை.. வெயில் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

திருநெல்வேலியில் திடீரென கொட்டிய மழை.. வெயில் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

X
திருநெல்வேலியில்

திருநெல்வேலியில் திடீரென கொட்டிய மழை

Sudden Rain In Tirunelveli | திருநெல்வேலியில் திடீரென மழை பெய்ததால் வெயில் தணிந்து குளிச்சி நிலவியது இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டடத்தின் பல இடங்களில் மார்ச் முதல் வாரத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், வெப்பநிலை உயரத் தொடங்கியது. இந்த வெப்பம் படிப்படியாக அதிகரித்து வந்தது.

சமீபத்தில் பாளையங்கோட்டையில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவாகி இருந்தது. இதனிடையே கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாக, தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், திருநெல்வேலியில் மதியம் வரை வெயில் கொளுத்திய நிலையில், திடீரென மாலையில் குளிர்ச்சியாக வானிலை மாறியது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதனைத் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. இதேபோல் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த திடீர் மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த திடீர் மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Local News, Tirunelveli, Weather News in Tamil