பிரபலமான பத்தமடை பாயை நெசவு செய்து வரும் பெண் நெசவாளர் தனது தந்தையை போன்று தேசிய விருது வாங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே பத்தமடை என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் நெய்யப்படும் பாய்கள் பிரபலமானவை. தாமிரபரணி ஆற்றின் படுக்கைகளில் வளரும் கோரை எனும் புற்களில் இருந்து இந்தப் பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. பத்தமடை பாய்கள் தயாரிப்பதில் அந்தப் பகுதியிலுள்ள நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைமுறை தலைமுறையாக இந்த தொழிலை செய்து வரும் நெசவாளர் கூறுகையில், ‘எனது பெயர் சீனத் பேபி. நாங்கள் பாய் தொழில் செய்து வருகிறோம். ஆறு தலைமுறையாக இந்த தொழிலை செய்து வருகிறோம். எனது தந்தை ரஹமத் அப்துல்லா தேசிய விருது வாங்கியுள்ளார். நான் மாநில அளவில் விருது வாங்கி உள்ளேன். முன்பு தாமிரபரணி ஆற்றில் பாயை ஊற வைத்தோம். தற்போது தொட்டியில் ஊற வைக்கிறோம். பாயில் திருவள்ளுவர் சிலை வடிவமைத்துள்ளோம். எனக்கும் தேசிய விருது வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது' என்றார்
இங்கு சாதாரண பாய் முதல் உயர் ரக பாய்வரை தயாரிக்கப்படுகிறது. இந்த பாய்கள் இயற்கையாக விளையும் புற்களில் இருந்து தயாரிக்கப்படுவதால் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. வழக்கமான நெசவு மற்றும் வடிவங்களைத் தவிர பத்தமடை பாய் திருமண விழாக்களுக்கு செய்யப்படுகிறது. மணமகன், மணமகள் பெயர்களும் திருமண தேதியும் பாயில் பின்னப்பட்டு தயார் செய்யப்படுகிறது. இந்த பாய்க்கு உலக அளவில் சிறந்த வரவேற்பு உள்ளது.
பாய் தயாரிப்பதற்கான வழிமுறை: புல்லை உலர்த்துதல், ஊறவைத்தல், பிரித்தல், சாயம் இடுதல் போன்ற நீண்ட செயல்முறைகள் கொண்டது. தேவையை பூர்த்தி செய்வதற்காக மின்சக்தியில் இயங்கும் தறிகள் உள்ளன. பத்தமடை பாய் சொசைட்டி உதவியாளர் முத்துகிருஷ்ணன் பாய் விலை 150 ரூபாய் முதல் 8,000 ரூபாய் வரை உள்ளதாக தெரிவித்தார்.
நெல்லையில் கோலாகலமாக நடைபெறும் பொருட்காட்சி- குழந்தைகள் உற்சாகம்
செய்தியாளர்: சந்தானம், திருநெல்வேலி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli