நெருக்கடி நேரத்தில் பாரதியாருக்கு பணம் கொடுத்து உதவியவரும், வ.உ.சியுடன் நெருக்கமான நட்பை கொண்டிருந்த விடுதலைப் போராட்ட வீரர் பரலி சு.நெல்லையப்பர். வரலாற்றுப் பக்கங்களில் சில பேருக்கு நல்ல வெளிச்சம் கிடைக்கும், சில பேருக்கு மிக குறைந்த வெளிச்சம் மட்டுமே கிடைக்கும்.
அந்தவகையில் வஉசி, மகாகவி பாரதி ஆகியோரை நமக்கு நன்கு தெரியும். இவர்களோடு நெருக்கமாக இருந்த பரலி சு.நெல்லையப்பர் பெயரை நிறைய பேர் புத்தகங்களில் வாசித்திருக்கலாம். இவர் யார் என்பது குறித்து, எழுத்தாளர் நாறும்புநாதன் நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
யார் இந்த நெல்லையப்பர்?
பரலி சு.நெல்லையப்பர் பாரதியாருக்கும், வ.உ.சிக்கும் நெருக்கமானவர் என்று சிலருக்கு தெரியும். அவர் திருநெல்வேலிக்காரர் என்பதும் தெரிகிறது. நெல்லையப்பர் பெயரில் அவர் பெயர் உள்ளது. அப்படி என்றால் பரலி என்பதன் அர்த்தம் என்ன? நெல்லை மாவட்டம் அருகே உள்ள பல்லிக்கோட்டைதான் பரலி ஆகும். பிரபல எழுத்தாளர் வள்ளிகண்ணன் நூல்களை படிக்கும்பொழுது தான், பல்லிக் கோட்டை என்பது பரலிக்கோட்டையாக மாறியுள்ளது என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க : மளிகை கடையில் வாங்கிய சாக்லேட்டில் புழு.. வாடிக்கையாளர் அதிர்ச்சி!
இந்த ஊர் தாழயூத்திலிருந்து சுமார்10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ஊரை சேர்ந்தவர் தான் பரலி சு.நெல்லையப்பர். இவர் பாரதிக்கு மிக நெருக்கமானவர். பாரதியாரால் தம்பி என அன்போடு அழைக்கப்பட்டவர். பாரதியாருக்கு பணம் நெருக்கடி வரும்போது எல்லாம் நெல்லையப்பரிடம் தான் கேட்பாராம். அவ்வளவு நட்பு இருவருக்கும் இருந்தது. புதுச்சேரியில் பாரதி இருக்கும் பொழுது குயில் பாட்டு, கண்ணன் பாட்டு உள்ளிட்ட பாடல்களை நெல்லையப்பர் பரவலாக மக்களிடம் அச்சிட்டு கொண்டு சென்றார்.
பாரதி பாடல்களை மக்களிடம் சேர்த்தவர் :
பாரதியின் வந்தே பாரதம் உள்ளிட்ட பாடல்களை பதிவு செய்தால் தடை செய்து விடுவார்கள் என எண்ணி நாட்டு பாடல்கள் என தலைப்பு வைத்து மக்களிடம் கொண்டு சென்றவர் நெல்லையப்பர். நெல்லையப்பர் இவ்வாறு பாரதியாரின் நூல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்றால் ‘ஓடி விளையாடு பாப்பா’ போன்ற. பாடல்கள் நமக்கு தெரியாமலேயே போயிருக்கும்.
அதேபோல் வ.உ.சி.சுதேசி கப்பல் கம்பெனியை நடத்தினார், அதில் நெல்லையப்பர் குமாஸ்தாவாக பணியாற்றினார். வ.உ.சி. யை ஆங்கிலேயர்கள் கோவை சிறையில் அடைத்தவுடன், பரலி சு.நெல்லையப்பரும் கோவை அருகே உள்ள ஓர் ஊரில் வீடு வாடகைக்கு எடுத்து மாதத்திற்கு ஒரு முறை வ.உ.சி.யை சந்தித்து, நாட்டின் நிலவரத்தை அவரிடம் சொல்லியும், அங்குநடக்கும் செய்திகளை கேட்டறிந்தும் கொண்டுள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதிகம் பிரபலமில்லாதவர் :
அப்போதுதான் வஉசி-யை ஆங்கிலேயர்கள் செக்கிழுக்கச் சொன்னார்கள் என்பதை அறிந்து, இந்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் நெல்லையப்பர். இவர் வரலாற்றில் போதிய வெளிச்சம் இல்லாத தலைவர் ஆவார்” என எழுத்தாளர் நாறும் பூ நாதன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli