முகப்பு /திருநெல்வேலி /

பாளையங்கோட்டை ராஜகோபாலசாமி கோவில் பங்குனி பிரம்மோத்ஸவம்... கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவிழா!

பாளையங்கோட்டை ராஜகோபாலசாமி கோவில் பங்குனி பிரம்மோத்ஸவம்... கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவிழா!

X
பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயில்

Palayamkottai Rajagopalaswamy Temple | பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்வாக தேரோட்டம் ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இதையொட்டி காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது. இரவில் தோளுக்கினியானில் பெருமாள். திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். தொடர்ந்து திருவிழா நாட்களில் காலையில் பல்லக்கில் உலாவும் சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.

வரும் 28ஆம் தேதி இரவு சிம்மவாகனத்தில் யோகநரசிம்மர் அலங்காரத்திலும், 29ஆம் தேதி அனுமன் வாகனத்தில் ராமர் அலங்காரத்திலும், 30ஆம் தேதி ஆதிசேஷ வாகனத்தில் பரமபத நாதன் அலங்காரத்திலும், 31ஆம் தேதி இரட்டை கருட சேவையில் வைகுண்ட நாதன் அலங்காரத்திலும் பெருமாள் வீதி உலா நடைபெறும்.

ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவம்

ஏப்ரல் மாதம் 1ம் தேதி இரவு யானை வாகனத்திலும், இரண்டாம் தேதி மாலை சூர்னோத் சவம் மஞ்சள் நீராடும் இந்திர விமானத்தில் கண்ணன் அலங்காரத்திலும் இரவு எட்டு மணிக்கு புன்னை மர வாகனத்தில், கிருஷ்ணர் அலங்காரத்திலும் பெருமாள் வீதி உலா நடைபெற உள்ளது.

ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவம்

அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 3ஆம் தேதி இரவு குதிரை வாகனத்தில் ராஜா அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளிகிறார். தொடர்ந்து, திருமங்கை யாழ்வார் மங்களாசாசனம் நடைபெற உள்ளது.

ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவம்

விழாவின் சிகர நிகழ்வாக தேரோட்டம் ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 9 மணிக்கு மலர் அலங்காரத்தில் பெருமாள் தேரில் எழுந்தருளி வீதி உலா வர உள்ளார். அன்று இரவு 7:30 மணிக்கு தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில், பெருமாள் காட்சியளிக்க உள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதனைத் தொடர்ந்து, 6ம் தேதி காலை தீர்த்தவாரியும் இரவு சப்தா வர்ணத்தில். ராஜா அலங்காரத்திலும் பெருமாள் வீதி உலா வர இருக்கிறார்.

First published:

Tags: Local News, Tirunelveli