முகப்பு /திருநெல்வேலி /

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நூற்றாண்டு சிறப்புக் கண்காட்சி- ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நூற்றாண்டு சிறப்புக் கண்காட்சி- ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

X
தூய

தூய சவேரியர் கல்லூரி

Tirunelveli | பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் நூற்றாண்டு சிறப்புக் கண்காட்சியின் தொடக்க விழா கல்லூரியின் போப் பிரான்சிஸ் அரங்கத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி தனது நூற்றாண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடிவருகிறது. கொண்டாட்டத்தின் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளில் ஒரு அம்சமாக பல்துறை சார்ந்த சிறப்புக் கண்காட்சியை ஜனவரி 30 முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை 5 நாள் கொண்டாட்டமாக நடத்திவருகிறது.

இந்த நூற்றாண்டுக் கண்காட்சியின் தொடக்க விழா கல்லூரியின் போப் பிரான்சிஸ் அரங்கத்தில் விமர்சையாக இன்று கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக வரவேற்பு பாடல், இறை வணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் வரவேற்புரையைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்தந்தை மரியதாஸ் வாழ்த்துரை வழங்கினார்.

கண்காட்சியில் மாணவர்கள் 

கல்லூரியின் செயலர் அருட்தந்தை முனைவர் G.புஷ்பராஜ் ஆசியுரை வழங்கிப் பேசினார. தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை முனைவர் V. ஹென்றி ஜெரோம் முதன்மையுரை ஆற்றிப் பேசினார்.

கண்காட்சியில் மாணவர்கள்

இந்த நூற்றாண்டு சிறப்பு கண்காட்சியின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவரும், புகழ்பெற்ற விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின், இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் A. P. J. அப்துல் கலாம் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டு வலுவூட்டப்பட்ட பைபர் பிளாஸ்டிக் ஆய்வுப் பிரிவின் இணை இயக்குநருமான இனமுத்து வருகை தந்து சிறப்பு உரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினர் உரை, நன்றியுரை, மற்றும் தேசிய கீதத்தை அடுத்து நூற்றாண்டு கண்காட்சியின் தொடக்க விழா நிறைவுற்று தொடர்ந்து கண்காட்சி தொடங்கியது.

நெல்லை வஉசி மைதான சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்கள்.. கைவண்ணத்தை காட்டிய மாணவிகள்!

இதில் ஐந்து நாட்கள் துறை வாரியான கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 டிபார்ட்மெண்ட்ஸ், 23 சர்வீஸ் ஆர்கனைசேஷன் இணைந்து இந்த கண்காட்சியை அமைத்துள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேல் மாணவ, மாணவிகள் இக்கண்காட்சியை கண்டு களிக்க உள்ளனர் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

First published:

Tags: Local News, Tirunelveli