முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை புத்தகத் திருவிழாவில் பழமைவாய்ந்த வார்லி ஓவியக்கலை பயிற்சி - ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்...

நெல்லை புத்தகத் திருவிழாவில் பழமைவாய்ந்த வார்லி ஓவியக்கலை பயிற்சி - ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்...

X
வார்லி

வார்லி ஓவியங்கள்

Tirunelveli District | நெல்லை புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவர்களுக்கு பழமைவாய்ந்த வார்லி ஓவியக்கலை பயிற்சி அளிக்கப்பட்டு, ஓவியங்கள் வரையப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

6வது பொருநை நெல்லை புத்தக திருவிழாவில் நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான பயிற்சி பட்டறையில் கண்ணாடி ஓவியப் பயிற்சி நடத்தப்பட்டது. 

இந்த பயிற்சியை கைவினை கலை பயிற்றுனர் ரகமதுநிஷா பேகம் நடத்தினார். இதில், தூய இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் ஓவியங்கள் வரைந்து அசத்தினர். இதேபோல, நெல்லை புத்தகத் திருவிழாவின் லோகோவான இருவாச்சி பறவை வண்ணத் தாள்கள் கொண்டு உருவாக்க பட்டது. இப்பயிற்சியினை ஓவிய ஆசிரியர் கணேசன் நடத்தினார்.

பயிற்சியில் சிவராம் கலைக்கூட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஓவியம் வரைந்து அதில் வண்ணத் தாள்களை ஒட்டும் பயிற்சியினை மேற்கொண்டனர். இந்தியாவின், பழங்குடிமக்களின் பிரசித்தி பெற்ற ஓவியக் கலையில் ஒன்று வார்லி ஓவியக்கலை. இது 2,500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையுடையது. நமது மூதாதையர்கள் தங்கள் அன்றாட நிகழ்வுகளை, சடங்குகளை அறிவிக்கும் வகையில் வரையப்பட்ட ஓவியங்களே இந்த வார்லி ஓவியங்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொண்மை சிறப்பு வாய்ந்த இந்த வார்லி ஓவியக்கலை பயிற்சியினை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தொடங்கி வைத்தார். ஒவிய ஆசிரியர் ஈஸ்வரன் பயிற்சி கொடுத்தார். இதில் பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் மகளிர் ஆகியோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Tirunelveli