முகப்பு /திருநெல்வேலி /

படித்த இளைஞர்கள் இ-சேவை மையம் தொடங்க வாய்ப்பு.. நெல்லை ஆட்சியர் அறிவிப்பு!

படித்த இளைஞர்கள் இ-சேவை மையம் தொடங்க வாய்ப்பு.. நெல்லை ஆட்சியர் அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Educated Youth | திருநெல்வேலி மாவட்டத்தில் படித்த இளைஞர்களும், தொழில் முனைவோரும் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டத்தில் படித்த இளைஞர்களும் தொழில் முனைவோரும் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்  கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், கிராமப்புற தொழில் முனைவோர் மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே இ சேவை மையம் மூலம் வழங்கி வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் இ-சேவை மையங்களில் எண்ணிக்கையை அதிகரித்து மக்கள் குறுகிய நேரத்தில் சேவை பெறும் வகையில் படித்தவர்கள் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாகவும் இ சேவை மையத்தை நிறுவ வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர விரும்புபவர்கள் வரும் ஏப்ரல் 14ம் தேதி இரவு 8 மணிக்குள் www.tnesevai.gov.in, www.tnega.tn.gov.in ஆகிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் பயனர் எண் (யூசர் ஐடி) கடவுச்சொல் (பாஸ்வேர்டு) ஆகியவை விண்ணப்பதாரரின் தொலைபேசி எண் மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி வைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்

    First published:

    Tags: Local News, Tirunelveli