முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் தையல் பயிற்சி மையம் திறப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!

நெல்லையில் தையல் பயிற்சி மையம் திறப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!

X
நெல்லையில்

நெல்லையில் தையல் பயிற்சி மையம்

Nellai news | திருநெல்வேலியில் மகாத்மா காந்தி திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் இணைந்து நடத்தும் தையல் பயிற்சி மையம் நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் திருநெல்வேலி மாவட்ட தாட்கோ மற்றும் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் மற்றும் தூய்மை பணியாளர்களை உறுப்பினர்களாக கொண்ட மகாத்மா காந்தி திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் இணைந்து நடத்தும் தையல் பயிற்சி மையம் நடைபெற்று வருகிறது.

இந்த பயிற்சி மையம் தூய்மை பணியாளர்களாக பணிபுரியும் நபர்களின் பிள்ளைகளுக்கு மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு தொழில் முனைவராகும் முனைப்பில் நடைபெறுகிறது. பயிற்சி வகுப்புகள், திருநெல்வேலி டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ள, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தின் மாடியில் நடைபெறுகிறது.

இந்த பயிற்சி வகுப்புகளில் 30 பெண்களுக்கு மூன்று மாத காலம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தினமும் மூன்று மணி நேரம் இப்பயிற்சி மையம் இயங்கும். இது தூய்மை பணியாளர்களின் பிள்ளைகள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு சிறந்த பயிற்சி மையமாகத் திகழும்.

இதே போல் புதிய பேருந்து நிலையத்தில், உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் ஒன்று நடைபெற்று வருகிறது. இதில் தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் இந்த உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Nellai