முகப்பு /திருநெல்வேலி /

காலி பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் கொடுத்தால் காசு.. நெல்லை மாநகராட்சி ஆணையர் அசத்தல் அறிவிப்பு!

காலி பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் கொடுத்தால் காசு.. நெல்லை மாநகராட்சி ஆணையர் அசத்தல் அறிவிப்பு!

X
காலி

காலி பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் கொடுத்தால் காசு

Empty Plastic Bottle | தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக திருநெல்வேலி மாநகராட்சியில் காலி தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் பணம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tirunelveli, India

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக திருநெல்வேலி மாநகராட்சியில் காலி தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படிநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைபேரில் டவுன் சுகாதார அலுவலகத்தில் வைத்து சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் காலி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டத்தை தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “சோதனை ஓட்ட அடிப்படையில் நெல்லை மாநகராட்சியின் 4 மண்டலங்களில் ஒன்றான டவுன் பகுதியில் மட்டும் பொதுமக்கள் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை மாநகராட்சி அலுவலகங்களில் கொடுத்தால் ஒரு ரூபாய் பெற்றுக் கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சியில் உள்ள 11 அலுவலகங்களிலும் இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது” என கூறப்படுகிறது.

First published:

Tags: Local News, Tirunelveli