முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை அருங்காட்சியகத்தில் ஓலைச்சுவடி பாதுகாப்பு பயிலரங்கம்

நெல்லை அருங்காட்சியகத்தில் ஓலைச்சுவடி பாதுகாப்பு பயிலரங்கம்

நெல்லை அருங்காட்சியகத்தில் ஓலைச்சுவடி பாதுகாப்பு பயிலரங்கம்

நெல்லை அருங்காட்சியகத்தில் ஓலைச்சுவடி பாதுகாப்பு பயிலரங்கம்

Tirunelveli District News | திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஓலைச்சுவடி பாதுகாப்பு பயிலரங்கம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஓலைச்சுவடி பாதுகாப்பு பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தலைமையுரை வழங்கினார்.

அவரது உரையில், ஓலைச்சுவடிகளை பாதுகாக்கும் முக்கிய பணியினை அருங்காட்சியகங்கள் செயலாற்றி வருகின்றன. அவ்வாறு பாதுகாக்கப்படும் ஓலைச்சுவடிகள் பற்றியும் அவை பாதுகாக்கப்படும் முறைகள் பற்றியும் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துரைப்பதற்காகவே இந்த ஓலைச்சுவடி பாதுகாப்பு பயிலரங்கம் துவங்கப்பட்டது என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் வேலம்மாள் தொடக்கவுரை ஆற்றினார். அவரது உரையில் பல்வேறு தமிழ் இலக்கியங்களும், சிற்றிலக்கியங்களும் ஓலைச்சுவடிகள் மூலமாகத்தான் நமக்கு கிடைத்துள்ளன,அவற்றை பாதுகாக்கும் இந்த பயிலரங்கம் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும் என்றார்.

அவரை தொடர்ந்து நடைபெற்ற முதல் அமர்வில் ம.தி தா இந்து கல்லூரியின் மேனாள் தமிழ் துறை தலைவர் முனைவர் கட்டளை கைலாசம் சுவடியின் சுவடுகள் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில், ஓலைச்சுவடிகள் பற்றியும் ஓலைச்சுவடிகள் கடந்து வந்த பாதைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.மதிய இடைவேளைக்கு பிறகு நடைபெற்ற இரண்டாம் அமர்வில் சீட் அறக்கட்டளையின் மருத்துவ ஆலோசகர் மருத்துவர் வனிதா அவர்கள் பாரம்பரிய சித்த மருத்துவ முறைப்படி ஓலைச்சுவடிகள் பாதுகாக்கும் முறைகள் பற்றி விரிவாக விளக்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நிகழ்வில் கவிஞர்.சுப்பையா, காஜா மைதீன், ஆகியோர் உடனிருந்தனர். இப்பயிலரங்கில் குற்றாலம் பராசக்தி கல்லூரி வரலாற்று துறை மாணவிகள், பாளையங்கோட்டை சாராள் டக்கர் கல்லூரி தமிழ் துறை மாணவிகள், தூத்துக்குடி காமராஜர் கல்லூரி வரலாற்றுதுறை மாணவ மாணவிகள் மற்றும் பலர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Tirunelveli