திருநெல்வேலியில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் மூன்று பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஒரு லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை உள்ளடக்கியதாகும்.
அதன்படி 2023/24ம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15/08/2023 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக கீழ்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
1) 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண் பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1, 2022 அன்று 15 வயது நிரம்பியராகவும்மார்ச் 31,2023 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும்.
இதையும் படிங்க : திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் பணத்தில் கை வைத்தவருக்கு நேர்ந்த கதி..
2, கடந்த நிதியாண்டில் 2022/2023 அதாவது 01/04/2022 முதல் 31/0 3/2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டும் கருத்தில் கொள்ளப்படும்.
3, விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் (சான்று இணைக்கப்பட வேண்டும்).
4, விண்ணப்பதாரர்கள் சமுதாயநலனுக்காகதன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும் அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
5, மத்திய மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்க இயலாது.
6, விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கானபரிசீலணையில்கணக்கில் கொள்ளப்படும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
7, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 31/05/2023 அன்று மாலை 4 மணி ஆகும். 8,விண்ணப்பத்தினைதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்” என அறிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli