தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை அறிவிப்பு நெல்லை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் அரசு ஒதுக்கீடு இடங்களில் 2023 ஆம் ஆண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வருகிற 7ஆம் தேதி வரை www.skilltraining.tn.gov.in இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட இணையதளத்தில் தாங்களே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், அல்லது அரசு தொழிற்பயிற்சி நிலையம், பேட்டை, அம்பாசமுத்திரம் மற்றும் ராதாபுரம், டிஎஸ்டிஓ அலுவலகம் பேட்டை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வண்ணார்பேட்டை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஐடிஐ சேர்க்கை உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.
இந்த இணையதளத்தில் விண்ணப்பிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு தொழிற்பயிற்சி நிலையத்திலும் சேர்க்கை பெறலாம். தமிழகத்தில் உள்ளதொழிற்பயிற்சி நிலையங்களின் விபரங்கள், தொழிற்பிரிவுகள், தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு, இடஒதுக்கீடு ஆகியன இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஐடிஐயில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் எந்த பாகுபாடு இன்றி மாதம் ரூ.750 வீதம் கல்வி உதவி தொகை வழங்கப்படும். மேலும் தற்போதைய விதிகளின் படி, பயிற்சியின் போது லேப்டாப், மிதிவண்டி, வருடத்திற்கு இரண்டு சீருடைகள், ஒரு ஜோடி காலணி, பாட புத்தகங்கள், வரைபட கருவிகள் ஆகியவைகள் விலையில்லாமல் வழங்க வாய்ப்பு உள்ளது.
மேலும் மாணவர்கள் பயிற்சி நிலையத்திற்கு வந்து செல்ல இலவச பஸ்பாஸ் மற்றும் சலுகை கட்டணத்தில் ரயில் பாஸ் வழங்கப்படும். அரசு ஐடிஐயில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுப் பணி முன்னணி அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ITI, ITI Students, Local News, Tirunelveli