முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை அறிவியல் மையத்தில் 2 நாட்களுக்கு நுழைவு கட்டணம் இல்லை.. காரணம்  இதுதான்!

நெல்லை அறிவியல் மையத்தில் 2 நாட்களுக்கு நுழைவு கட்டணம் இல்லை.. காரணம்  இதுதான்!

X
மாதிரி

மாதிரி படம்

Nellai Science Centre | 2 தினங்களுக்கு நெல்லை அறிவியல் மையத்தினை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என மாவட்ட அறிவியல் மையம் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் சர்வதேச அருங்காட்சியக தினத்தை International Museum Day 2023 முன்னிட்டு'எனது பழங்கால கலைப்பொருட்கள் சேகரிப்பு' என்ற தலைப்பில் கண்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில், தங்களுடைய பல்வேறு பழங்கால பொருட்கள் சேகரிப்பினை காட்சிப்படுத்தினர். இந்த விழாவை, மதுரை தொல்லியல் அதிகாரி ஆசைத்தம்பி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

மேலும், முனைவர் வைத்தி ஆறுமுகசாமி, அமெரிக்கா லாஸ் ஏஞ்சலஸ்லில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி மற்றும் பேராசிரியர் தலைமை தங்கினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பழங்கால பொருட்களை பார்வையிட்டனர். அவர்களுக்கு அதன் உரிமையாளர்கள் பழங்காலப் பொருட்கள் குறித்து விளக்கி கூறினார்.

நெல்லை அறிவியல் மையம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், மாவட்ட அறிவியல் மையம், திருநெல்வேலியில் சர்வதேச அருங்காட்சியக தினத்தை . முன்னிட்டு நேற்று (19.05.2023) மற்றும் இன்று (20.05.2023) ஆகிய 2 தினங்களுக்கு அறிவியல் மையத்தினை பொதுமக்கள் பார்வையிட இலவசம் என மாவட்ட அறிவியல் மையம் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.

First published:

Tags: Local News, Tirunelveli