முகப்பு /திருநெல்வேலி /

இனி ஈஸியா வரி செலுத்தலாம்.. நெல்லை மாநகராட்சியில் புதிய வசதி அறிமுகம்!

இனி ஈஸியா வரி செலுத்தலாம்.. நெல்லை மாநகராட்சியில் புதிய வசதி அறிமுகம்!

நெல்லை மாநகராட்சியில் புதிய வசதி

நெல்லை மாநகராட்சியில் புதிய வசதி

Tirunelveli District News | திருநெல்வேலி மாநகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்ற வரிகளை செலுத்த புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாநகராட்சியில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கவும் வரி இனங்களை எளிதாக செலுத்தவும் க்யூ ஆர் கோடு வசதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 42வது வார்டுக்கு உட்பட்ட அன்பு நகர் என் ஹச் காலணியில் புதிய திட்டத் தொடக்க விழா நடைபெற்றது. மேயர் சரவணன் அப்பகுதியில் உள்ள வீடுகளில் க்யூ ஆர் கோடு கொண்ட பிவிசி கார்டை ஒட்டினார்.

பின்னர் அவர் கூறியதாவது, “சொத்துவரி, குடிநீர் கட்டணம், பிறப்பு இறப்பு சான்றிதழ்குறித்த புகார்கள் வணிக நிறுவனங்களின் சொத்து வரிகள் கட்டட அனுமதி குறித்த விவரங்கள் சாலை தெரு விளக்கு குறித்த விவரங்கள்தெருக்களின் சேகாரமாகும் குப்பைகள் அகற்றுவது குறித்த புகார்கள் பொதுமக்கள் மற்றும் வயதான மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்தவாறு சிரமப்படாமல் அவர்களது கோரிக்கைகளை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வசதியாக QR கோடு முறையை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாநகராட்சியில் 42வது வார்டு தேர்வு செய்து செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை விரைவில் திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் சிரமப்படாமல் கோரிக்கைகளை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த இயலும்” என அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Tirunelveli