முகப்பு /திருநெல்வேலி /

ஆசிய தடகள போட்டியில் கலந்துகொள்ளும் வடக்கன்குளம் மாணவி.. நெல்லைக்கு பெருமை சேர்ப்பாரா..?

ஆசிய தடகள போட்டியில் கலந்துகொள்ளும் வடக்கன்குளம் மாணவி.. நெல்லைக்கு பெருமை சேர்ப்பாரா..?

X
ஆசிய

ஆசிய தடகள போட்டியில் கலந்துகொள்ளும் வடக்கன்குளம் மாணவி

Nellai Woman Participating Asian Athletics Championships | திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஆசிய தடகள போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் ஊரை சேர்ந்த மாணவி கனிஷ்டா டீனா கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை திருவண்ணாமலையில் நடைபெற்ற 20 வயதிற்கு உட்பட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு 21வது தேசிய கூட்டமைப்பு கோப்பை ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் கலந்து கொண்டார்.

ஆசிய தடகள போட்டியில் கலந்துகொள்ளும் வடக்கன்குளம் மாணவி

இவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடு பாதையை 55.89 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்று வடக்கன்குளத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த மாணவிக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தன்னுடைய முந்தைய சாதனையான 57.39 வினாடிகளை இப்போட்டியில் முடித்துள்ளார் கனிஷ்டா டீனா.

இந்த மாணவி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கனிஷ்டா டீனா வருகிற ஜூன் மாதம் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை தென்கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய இளையோர்களுக்கான தடகள போட்டியில், இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ள உள்ளார். ஆசிய தடகள போட்டியில் வெற்றி பெற அவருக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், போட்டியில் வெற்றி பெற்று, தனது ஊர் மக்களுக்கு பெருமை சேர்ப்பேன் எனவும் மாணவி விருப்பம் தெரிவித்துள்ளார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Tirunelveli