முகப்பு /செய்தி /திருநெல்வேலி / தூங்கி கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி!

தூங்கி கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி!

கொதிக்கும் எண்ணெய்

கொதிக்கும் எண்ணெய்

Nellai fight | குடும்ப தகராறில் ஆத்திரத்தில் இருந்த மனைவி தூங்கிகொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றினார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

வீரவநல்லூரில் குடும்பத்தகராறில் கணவன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவியின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் தெற்கு வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (40). கூலித் தொழிலாளியான இவருக்கும் வீரவநல்லூர் வடக்கு ரத வீதியை சேர்ந்த அய்யம்மாள் (35) என்பவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மாதவன் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறில்  ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அய்யம்மாள் தற்போது அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்றிரவு மனைவி வீட்டுக்கு சென்ற மாதவன் வழக்கம் போல் தகராறு செய்து அங்கேயே தூங்கியுள்ளார்.  ஆத்திரத்தில் இருந்த மனைவி அய்யம்மாள், தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மாதவன் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: ஐயப்பன், நெல்லை.

top videos
    First published:

    Tags: Crime News, Husband Wife, Local News, Nellai