முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் கள்ளழகர் கோலத்தில் வீதியுலா சென்ற பெருமாள்.. பக்தர்கள் பரவசம்!

நெல்லையில் கள்ளழகர் கோலத்தில் வீதியுலா சென்ற பெருமாள்.. பக்தர்கள் பரவசம்!

X
வரதராஜ

வரதராஜ பெருமாள்

Nellai News : திருநெல்வேலியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோத்ஸவ விழாவின்போது, கள்ளழகர் திருக்கோலத்தில் பெருமாள் திருவீதி உலா வந்தார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி சந்திப்பு மேலவீரராகவபுரத்தில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரமோத்ஸவம் சிறப்பாக கொண்டாடப்பட்டுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு திருவிழாவையொட்டி கோவிலில் காலையில் சிறப்பு திருமஞ்சனம் கொடியேற்றத்திற்கு பின்பு, மகா தீபாரணை நடைபெற்றது. மாலையில் அன்ன வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா வந்தார்.

திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது. மே 4ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், 5ஆம் தேதி ஹனுமன் வாகனத்தில் ராமர் திருக்கோலத்திலும் 6 ஆம் தேதி சேஷ வாகனத்திலும் பெருமாள் வீதி உலா வந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த மாதம் 7ஆம் தேதி இரவு 10 மணிக்கு வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும், ஆண்டாள் அன்ன வாகனத்திலும் வேதவல்லி தாயார் சேஷ வாகனத்திலும், நம்மாழ்வார் வெள்ளி தோளுக்கியானிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். எட்டாம் தேதி யானை வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், 9ஆம் தேதி இந்திர வாகனத்தில் வீதி உலா வந்தார்.

இந்நிலையில் திருவிழாவின் எட்டாம் நாளான மே 10ஆம் தேதி பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வீதி உலா வந்தார். முதலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, நான்கு மாட வீதிகளிலும் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Tirunelveli