முகப்பு /திருநெல்வேலி /

மின்கம்பத்தில் உரசி நின்ற வரதராஜ பெருமாள் தேர்.. நெல்லையில் பரபரப்பு..

மின்கம்பத்தில் உரசி நின்ற வரதராஜ பெருமாள் தேர்.. நெல்லையில் பரபரப்பு..

X
மின்கம்பத்தில்

மின்கம்பத்தில் உரசி நின்ற வரதராஜ பெருமாள் தேர்

Nellai Varadaraja Perumal Chariot Festival : நெல்லை வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவின்போது தேர் மின்கம்பத்தில் உரசி நின்றது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டத்தில் வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் சிகர நிகழ்வான நேற்று (மே 11ம் தேதி) தேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவிற்காக கோயில் நிர்வாகம் காவல்துறை, மாநகராட்சி, மின்சாரத்துறை சார்பில் தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக தேர் திருவிழா நடைபெறுவதற்கு முன்பாக திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி, உத்தரவின்படி பாதுகாப்புக் கருதி மின்னோட்டம் நிறுத்தப்பட்டு மின் பாதைகளை ஒழுங்குபடுத்தும் பணிகளை உதவி செயற் பொறியாளர் தங்கமுருகன், உதவி மின் பொறியாளர் உமாமகேஸ்வரி,ஆக்க முகவர்கள் அசோகன்,சஷ்டிகுமார் ஆகியோர் மேற்பார்வையில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

மின்கம்பத்தில் உரசி நின்ற வரதராஜ பெருமாள் தேர்

மற்ற கோயில்களை விட இங்கு பாதை குறுகியதாக இருக்கும். ஏராளமான கடைகளும் உள்ளன. திருநெல்வேலியின் முக்கிய பகுதியாக இது கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சவாலான பகுதியில் தேர் திருவிழா தொடங்கி 10 நிமிடத்தில் அக்னி மூலையில் உள்ள மின் கம்பத்தில் தேர் உரசி நின்றது. தேர் எளிதாக அங்கிருந்து கிளம்பி விடும் என அனைவரும் நினைத்தனர்.

ஆனால் மின்கம்பத்தில் தேர் சிக்கலாக உரசி நின்றது. உடனே அங்கு பணியில் இருந்த பாலமுருகன் என்ற மின் ஊழியர் மின் கம்பம் மீது விறுவிறுவென ஏறினார். கடும் வெயிலிலும் அந்தப் பதட்டத்திலும் அவர் மின்கம்பத்தில் சுமார் 20 நிமிடங்கள் நின்றவாறு மின் கம்பியை சாதுரியமாக கழட்டி தேர் செல்வதற்கு வழி வகுத்தார்.

இவர் மட்டுமல்லாமல் அனைத்து மின் ஊழியர்களும் தேர் செல்வதற்கு பக்க பலமாக நின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வெற்றிகரமாக தேர் கிளம்பிய இடத்திலேயே வந்து சேர்ந்த பிறகு மின் ஊழியர்கள் அனைவரும் அதன் முன்பு நின்றவாறு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இறுதியாக அப்பகுதி முழுவதற்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Local News, Tirunelveli