முகப்பு /திருநெல்வேலி /

கைதிகளுக்கு பற்களை பிடுங்கிய விவகாரம்.. நெல்லை எஸ்பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு திடீர் மாற்றம்..

கைதிகளுக்கு பற்களை பிடுங்கிய விவகாரம்.. நெல்லை எஸ்பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு திடீர் மாற்றம்..

நெல்லை எஸ்பி சரவணன்

நெல்லை எஸ்பி சரவணன்

Tirunelveli SP Transfer | திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் விஸ்வரூபமாக மாறிய நிலையில், நெல்லை எஸ்பி சரவணன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணனுக்கு நெல்லை மாவட்ட எஸ்பியாக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனைகாத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்துகூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். காவல் கண்காணிப்பாளர் சரவணன், 2001-ல் டிஎஸ்பியாக தேர்வு பெற்றவர். விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டிஎஸ்பியாக பணியாற்றியுள்ளார்.

இதையும் படிங்க : ஊட்டி மலை ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் காத்திருக்கீங்களா? - செம அறிவிப்பு வந்திருக்கு!

top videos

    2009-ம் ஆண்டு ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று தருமபுரி, சேலம் பகுதிகளில் பணிபுரிந்தார். 2011-ம் ஆண்டில் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று கடலூர் மாவட்டத்திலும், உளவுத்துறையிலும், சென்னை யில் போலீஸ் நிர்வாக பிரிவிலும் பணியாற்றியுள்ளார். திருநெல்வேலி எஸ்.பி ஆக சரவணன் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பொறுப்பேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Local News, Tirunelveli