முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் கோடை கால பயிற்சி முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

நெல்லையில் கோடை கால பயிற்சி முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

நெல்லை கோடை கால பயிற்சி முகாம்

நெல்லை கோடை கால பயிற்சி முகாம்

Nellai summer camp | நெல்லையில் கோடை கால பயிற்சி முகாமில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

கோடைகால பயிற்சி முகாமை நெல்லை அரசு அருங்காட்சியகமும் மாவட்ட மைய நூலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

பயிற்சியின் துவக்க நாளில் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தலைமையில் ஓவிய பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. மாவட்ட மைய மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் சிறப்புரை ஆற்றினார். முதன்மை நூலகர் வைலட், கலையாசிரியை சொர்ணம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஓவிய பயிற்சியினை பேட்டை பகுதியினை சார்ந்த ஓவியர் தங்கவேலு நடத்தினார்.

ஏராளமான மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் தங்களின் பெற்றோர்களுடன் கலந்து கொண்டு ஓவியங்களை வரைந்தனர். செவ்வாய்க்கிழமை( 09-05-23) நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஓவிய பயிற்சியும், புதன்கிழமை( 10-05-2023) மாவட்ட மைய நூலகத்தில் கதை சொல்லல் பயிற்சியும், வியாழக்கிழமை(11-05-23) நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு போட்டிகளும் நடைபெறவுள்ளது.

நீரின்றி என்கிற தலைப்பில் ஓவிய போட்டியும் , நாளைய தலைமுறைக்கு நீர் என்கிற தலைப்பில் கட்டுரை போட்டியும் ,நீர் விட்டு செல்வீரா நீரை என்கிற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெற உள்ளது. இப்போ போட்டியில் விருப்பமுள்ள அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம். போட்டிக்கு தேவையான எழுது பொருட்களை பங்கேற்பாளர்களே எடுத்து வர வேண்டும். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

ALSO READ | நெல்லையில் இன்று மின் தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!

தொடர்ந்து 14ஆம் தேதி மாவட்ட மைய நூலகத்தில் என் மனம் கவர்ந்த நூல் கட்டுரை பயிற்சியும், 15ஆம் தேதி அரசு அருங்காட்சியகத்தில் கலைப்பொருள்கள் தயாரிக்கும் பயிற்சியும், 16ஆம் தேதி அரசு அருங்காட்சியகத்தில்பலூன் ஓவிய பயிற்சியும் ,17ஆம் தேதி மாவட்ட மைய நூலகத்தில் நூல் விமர்சனம் பயிற்சியும், 18ஆம் தேதி அரசு அருங்காட்சியகத்தில் கழிவுகளின் இருந்து கலைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சியும், இருபதாம் தேதி மாவட்ட மைய நூலகத்தில் நற்சிந்தனை வகுப்பு பயிற்சியும், 21ஆம் தேதி மாவட்ட மைய நூலகத்தில் கதை எழுதும் பயிற்சியும், 22 ஆம் தேதி அரசு அருங்காட்சியகத்தில் களிமண்ணில் பொம்மை செய்யும் பயிற்சியும், 23ஆம் தேதி அரசு அருங்காட்சியகத்தில் துணியில் ஓவியம் வரையும் பயிற்சியும், 24ஆம் தேதி மாவட்ட மைய நூலகத்தில் பேச்சு பயிற்சியும், 25ஆம் தேதி அரசு அருங்காட்சியகத்தில் தேங்காய் சிரட்டையில் கலை பொருட்கள் தயாரிக்கும், பயிற்சியும் 27ஆம் தேதி மாவட்ட மைய நூலகத்தில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் பயிற்சியும், 29ஆம் தேதி அரசு அருங்காட்சியகத்தில் கண்ணாடி ஓவிய பயிற்சியும், 30ஆம் தேதி அரசு அருங்காட்சியகத்தில் கலைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சியும் நடைபெற உள்ளன என்கிற தகவலை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி மற்றும் மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் இணைந்து தெரிவித்தனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Summer Vacation, Tirunelveli