இந்திய அளவில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில், தமிழில் கட்டுரை எழுதிய நெல்லையை சேர்ந்த கல்லூரி மாணவி முதலிடம் பிடித்தார்.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் ‘சிறப்பான இந்தியாவை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் இந்திய அளவில் கட்டுரை போட்டிகளை நடத்தியது. இந்தியா எல்லா வகையிலும் வளமான நாடாக மாற்றுவதற்கு இளம் தலைமுறையினரிடம் இருந்து கட்டுரை மூலம் யோசனைகள் பெறப்பட்டன. இந்த போட்டிகளில் இந்தியா முழுவதிலும் இருந்து 7,500 கல்வி நிறுவனங்கள், லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 13 மொழிகளில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
இதில் தமிழகத்தில் இருந்து ஹிஸானா என்ற மாணவி தான் 2019-2020ம் ஆண்டு 12ம் வகுப்பு படிக்கும்போது கலந்துகொண்டு, தமிழ் மொழியில் கட்டுரை எழுதி இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தார். அவருக்கு இந்திய குடியரசு தலைவர் தலைமையில் டெல்லியில் நடந்த விழாவில், விருது மற்றும், பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இவர் தற்போது அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் 3ம் ஆண்டு கணினி அறிவியல் பிரிவில் படித்து வருகிறார். இவர் 12ம் வகுப்பு படித்தபோது இப்போட்டியில் தமிழ் மொழியில் சீனியர் கேட்டகிரியில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதுகுறித்து ஹிஸானா கூறுகையில், “இதற்கான பரிசு வழங்கும் விழா 17.04.2023 அன்று தலைநகர் டெல்லியில் வைத்து நடைபெற்றது. அன்று நம் நாட்டின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தது, அவரிடம் பரிசு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது” என அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli