முகப்பு /திருநெல்வேலி /

சுருக்கெழுத்து தேர்வில் முதலிடம்.. கலெக்டரிடம் வாழ்த்து பெற விருப்பம் தெரிவித்த நெல்லை மாணவி!

சுருக்கெழுத்து தேர்வில் முதலிடம்.. கலெக்டரிடம் வாழ்த்து பெற விருப்பம் தெரிவித்த நெல்லை மாணவி!

X
சுருக்கெழுத்து

சுருக்கெழுத்து தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி

Nellai Student : திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஸ்டூடண்ட்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பயிற்சி பெற்ற பூர்ணகலா என்ற மாணவி சுருக்கெழுத்து இண்டர் நிலையில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில், சுருக்கெழுத்து தேர்வில்முதலிடம் பெற்ற மாணவி கலெக்டரிடம் வாழ்த்து பெற விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து மாணவி பூர்ணகலா கூறுகையில், சுருக்கெழுத்து இண்டர் நிலையில் மாநில அளவில் முதலிடம் பிடிப்பதற்கு கடின உழைப்பும் இதற்கு முன்பு சுருக்கெழுத்து தமிழில் ஜூனியர், சீனியர் அளவில் தேர்ச்சி பெற்றதும் தான் காரணம் என தெரிவித்தார்.

மேலும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் வாழ்த்து பெற வேண்டும் என்பது ஆசை எனவும், வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அவரை பார்ப்பேன் என்றும் மாணவி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சுருக்கெழுத்து பயின்றால் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளதாக ஸ்டூடண்ட்ஸ் இன்ஸ்டிடியூட் முதல்வர் இளங்கோ தெரிவித்துள்ளார்.

சுருக்கெழுத்து தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி

இதுகுறித்து பேசிய அவர்,சுருக்கெழுத்தில் 5 நிலைகள் உள்ளன. தமிழ்நாடு அரசு வருடத்திற்கு இரண்டு முறை தேர்வுகள் நடத்தில் சான்றிதழ்களை வழங்குகின்றது.

நீதிமன்றங்களில் சுருக்கெழுத்துப் பணி, பிரபல நிறுவனங்களில் தலைமை அதிகாரிக்கு குறிப்பெடுக்கும் பணி என்று வேலை வாய்ப்புகள், மிகப் பெரிய வழக்கறிஞர்கள் தனக்கென்று ஒரு சுருக்கெழுத்தாளரைப் பணியில் வைத்திருப்பார்கள்.

நீதிபதிகள் தீர்ப்புகளை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ சொல்வதை சுருக்கெழுத்தில் எழுதி தட்டச்சு செய்வார்கள். பெரிய அதிகாரிகள் தான் பேச வேண்டிய கூட்டத்தில் பேசவேண்டியதை கூற சுருக்கெழுத்தாளர்கள் எழுதி தட்டச்சு செய்து கொடுப்பார்கள். எனவே இதுகுறித்து தெரியாத மாணவர்களும் இனி சுருக்கெழுத்து பயில அருகே உள்ள பயிற்சி நிலையத்தை நாட வேண்டும் என தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Tirunelveli