தமிழகத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்குச் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களே காரணம் என காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பாயின் பட்டம் பெறும் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் சே.மு. அப்துல்காதர் வரவேற்புரையாற்றினார். தாளாளர் ஹாஜி த.இ.செ.பத்ஹுர் ரப்பானி வாழ்த்துரை வழங்கியபோது "உயர்கல்வி அதிகப்பெறக்கூடியவர்கள் தமிழ்நாட்டு மாணவர்கள், தரமான கல்வியைப் பெறுகிறார்கள். அறிவுக்கோட்டை பாளையங்கோட்டை ஆட்சிக்குழுத் தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யது அப்துர் ரஹ்மான், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஹாஜி எம்.கே.எம்.முஹம்மது நாசர், பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முகமது நவாப் ஹுசேன், டாக்டர் சித்தி ஜமீலா, துணை முதல்வர் டாக்டர் எஸ்.எம்.ஏ.செய்யது முகமது காஜா மற்றும் 31 துறைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
விழாப் பேருரை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி, 1000 பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பேருரை வழங்கியபோது " தமிழகத்தின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனமாக சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி திகழ்கிறது. கல்வி வாழ்வில் சாதிக்க உதவுகிறது. ஒரு பிறவியில் ஒருவன் கற்ற கல்வி ஏழுபிறவிக்கும் உதவுகிறது என்கிறது திருவள்ளுவர். இளையோரை முன்னேற்றம் சிறப்பான கல்வியை இக்கல்லூரி வழங்குகிறது. கல்வி உங்களுக்குள் வெளிச்சத்தைப் பாய்ச்சி சமூக வளர்ச்சிக்கு உதவுகிறது. அனுபவத்தின் அடையாளமாகத் திகழும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மரியாதை தரவேண்டும். என்னால் முடியும் என்று எண்ணி போட்டி மிகுந்த உலகில் மொழி ஆற்றலை வளர்த்து வாழ்வில் முன்னேற வேண்டும். கற்றல் வாழ்க்கை முழுக்கத் தொடர்வது, முடிவில்லாதது. நாட்டினை உருவாக்கும் கடமை மாணவர்களுக்கு இருக்கிறது.
தோல்வியிலிருந்து வெற்றிக்கான சூத்திரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். சவால்களை எதிர்கொள்ளுங்கள். மாநில மத்திய அரசுகள் நிறைய திட்டங்களை இளையோருக்கு வைத்திருக்கிறது. உலகளாவிய ஆய்வுகள் உங்களை உயர்த்தும். செல்போன் பயன்பாடு அதிகமாக உள்ளது கவலைதருகிறது. யோகாவும் வேகநடையும் உங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்ய வைக்கும். கனவு காணுங்கள், தினமும் அதை நினையுங்கள், பின்னர் அதை நிறைவேற்றுங்கள்.
தோல்விகள் தற்காலிகமானவை. ஐன்ஸ்டீன் 7 வயதில் எதையாவது சாதிக்க வேண்டும் என எண்ணினார். வால்ட் டிஸ்னி, தாமஸ் ஆல்வா எடிசன் போன்றோர் தோல்விகளில் இருந்து பாடம் கற்றவர்கள். வெற்றிக்கு எந்தக் குறுக்குவழியும் இல்லை. டாக்டர் அப்துல்கலாம் நமக்குள் நெருப்பிருக்கிறது, அதைக் கொண்டு வெற்றிபெற வேண்டும் என்றார். நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.சிறு ஆய்வுக்கட்டுரை கூட எழுதாமல் இருந்தேன். ஆனால் 432 ஆய்வுக்கட்டுரைகளைப் பின்னாளில் எழுதினேன். 23 நாடுகளுக்குப் பயணித்தேன். சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் இல்லை என்றால் தமிழ்நாட்டில் 52 விழுக்காடு உயர்கல்வி விகிதம் இருந்திருக்காது.
வடமாநிலங்களில் இவ்விகிதம் 27 விழுக்காடுதான்.நானும் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி பயின்றவன்தான். கல்வியால் மட்டுமே நம் வாழ்வில் உயர்வைத் தர முடியும் " என்று பேசினார். நேரடியாகப் பட்டம் பெறாதோர் அறிக்கையைக் கணினித் துறைத் தலைவர் டாக்டர் சாகுல்ஹமீது வழங்கினார். பட்டம் பெறும் விழா உறுதிமொழியைக் கல்லூரி முதல்வர் டாக்டர் சே.மு. அப்துல் காதர் செய்து வைக்க 1000 பட்டதாரிகளும் எழுந்து நின்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். துணை முதல்வர் டாக்டர் எஸ்.எம்.ஏ.செய்யது முகம்மது காஜா நன்றி கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Graduation, Local News, Nellai, Tirunelveli