முகப்பு /திருநெல்வேலி /

தென்தமிழகத்தின் முதல் DTS தியேட்டர்.. 25வது ஆண்டை கொண்டாடும் நெல்லை ராம் திரையரங்கு..

தென்தமிழகத்தின் முதல் DTS தியேட்டர்.. 25வது ஆண்டை கொண்டாடும் நெல்லை ராம் திரையரங்கு..

X
நெல்லை

நெல்லை ராம் தியேட்டர்

Tirunelveli ram theatre | திருநெல்வேலியில் ரசிகர்கள் கொண்டாடும் திரையரங்காகமாக ‘ராம் முத்துராம் சினிமாஸ்’ திகழ்கிறது.

  • Last Updated :
  • Tirunelveli, India

இங்குள்ள, ஸ்கிரீனில் முன்னணி நடிகர்களின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது டீசர் வெளியிட்டால் கூட அது சோசியல் மீடியாவில் வைரலாகிவிடும். குறிப்பாக இந்த திரையரங்கில் சவுண்ட் சிஸ்டம் ஸ்கிரீன் சிறப்பாக இருக்கும் என்ற ரசிகர்கள் கூறுகினறனர்.

குடும்பத்துடன் படம் பார்க்க சிறந்த இடமாக உள்ள ராம் முத்துராம் சினிமாஸ் தனது 25 ஆவது ஆண்டை கொண்டாடுகிறது.

இது, தென்னகத்தின் இரண்டு ஸ்கிரீன் உள்ள திரையரங்காகவும் டிடிஎஸ் வசதியுடனும் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.

1999-ல் தொடங்கிய ராம் முத்துராம் சினிமாஸில் முதன் முதலில் மோனிஷா என் மோனலிச, பெரியண்ணா ஆகி படங்கள் திரையிடப்பட்டன. இந்த திரையரங்கில் முதன் முதலில் முதல்வன் திரைப்படம் 100 நாட்கள் ஓடியது. தொடர்ந்து ராம் முத்துராம் சினிமாஸ் நிர்வாகம் தியேட்டரை டெக்னிக்கல் ரீதியாக அப்டேட் செய்து கொண்டது.

பின்னர் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. ரசிகர்களின் வரவேற்பால் தியேட்டர் நிர்வாகத்துடன் நடிகர்கள் நடிகைகள் தங்கள் நட்பை தொடர்ந்து வருகின்றனர். முன்னணி நடிகர்களின் படங்கள் ராம் முத்துராம் சினிமாஸில் திரையிடப்பட்டால் வெளியூர்களில் இருந்து கூட ரசிகர்கள் வந்து கொண்டாடுவார்கள் என அதன் உரிமையாளர் ராமசாமி ராஜா தெரிவித்தார்.

top videos

    25 ஆண்டுகளாக நல்ல வரவேற்பு அளித்த திருநெல்வேலி மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் ராம் முத்துராம் சினிமாஸிற்கு வந்து தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் படங்களை பார்த்து கொண்டாடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

    First published:

    Tags: Local News, Theatre, Tirunelveli, Trinelveli theatre