முகப்பு /திருநெல்வேலி /

கொளுத்தும் வெயில்.. நெல்லையில் 9 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்த மின் நுகர்வு!

கொளுத்தும் வெயில்.. நெல்லையில் 9 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்த மின் நுகர்வு!

X
மாதிரி

மாதிரி படம்

Nellai Current usage increase | திருநெல்வேலியில் கத்தரி வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் மின் நுகர்வு 19 ஆயிரம் மெகா வாட்டாக உயர்ந்துள்ளது என  மின்வாரியம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில் கத்தரி வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மொத்த மின் நுகர்வு வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. கத்திரி வெயில் தாக்கம் மே 4 ஆம் தேதி தொடங்கியது. மே 30 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் தொடரும் என தெரிகிறது.

கடந்த ஒரு வாரமாக வெப்ப பதிவு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. காலை 8 மணி முதலே சுட்டெரிக்கும் வெயில் மாலை 5 மணி வரை நீடிக்கிறது. இதனால் மக்கள் புழுக்கத்தில் தவிக்கின்றனர்.

இதனிடையே வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிக்க வீடுகள், கடைகள், நிறுவனங்களில் மின்விசிறி, ஏர்கூலர், ஏசி போன்ற மின் சாதனங்கள் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன. பலர் கூடுதல் மின்விசிறிகளை பயன்படுத்துகின்றனர்.

இதனால் மின்நுகர்வும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதுவரை 18 ஆயிரம் மெகாவாட்டாக இருந்த மின்நுகர்வு 19 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்ததாக தெரிகிறது. நீண்ட நேரம் மின்தடை ஏற்படாமல் இருப்பதற்காக பெரிய பழுது ஏற்படும் இடங்களில் மாற்று பாதையில் உடனடியாக மின் விநியோகம் வழங்கப்படுகிறது என மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Nellai