முகப்பு /திருநெல்வேலி /

நாகர்கோவில் - நெல்லை, கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவிப்பு..

நாகர்கோவில் - நெல்லை, கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவிப்பு..

எக்ஸ்பிரஸ் ரயில்கள்

எக்ஸ்பிரஸ் ரயில்கள்

Tirunelveli - Nagerkovil Train | இரட்டை ரயில் பாதை ஆய்வு பணி காரணமாக நெல்லை - நாகர்கோவில், நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tirunelveli, India

இரட்டை ரயில் பாதை ஆய்வு பணி காரணமாக நெல்லை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள்ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெல்லை - நாகர்கோவில் வழித்தடத்தில் நாங்குநேரி-மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை ஆய்வு பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதன் காரணமாக நெல்லையில் இருந்து இன்று (மார்ச் 24) காலை 6.35 மணிக்கு நாகர்கோவில் நோக்கி இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06642) மற்றும் மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து இன்று காலை 10.35 மணிக்கு நெல்லை நோக்கி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06643) ரத்து செய்யப்படுகின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதேபோல நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (16321) இன்றும், கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (16322) நாளையும் மார்ச் 25 ரத்து செய்யப்படுகின்றன இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Coimbatore, Local News, Tirunelveli